விக்ரம்பிரபு நடிப்பில் அசுரகுரு திரைப்பட trailer வெளியானது!

நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகியுள்ள அசுரகுரு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

Last Updated : Jul 7, 2019, 03:02 PM IST
விக்ரம்பிரபு நடிப்பில் அசுரகுரு திரைப்பட trailer வெளியானது! title=

நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகியுள்ள அசுரகுரு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

`துப்பாக்கிமுனை' திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் `அசுரகுரு'. இப்படத்தை இயக்குநர் மோகன்ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜ்தீப் என்பவர் இயக்கியுள்ளார். மகிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்க யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரலரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில், விக்ரம் பிரபு கொள்ளையனாக நடிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் நாள், சேலத்திலிருந்து வங்கிப் பணத்துடன் சென்னை வந்த விரைவு ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு, மர்ம நபர்கள் 5.75 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக, கடந்த ஒரு வருட காலமாக தனிப்படை காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். இதை மையமாக வைத்து த்ரில்லர் அம்சத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரைலர், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட திருடனை பிடிக்க காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

Trending News