உலக சாம்பியன்ஷிப்: பிவி சிந்து பைனலுக்கு முன்னேற்றம்

Last Updated : Aug 27, 2017, 08:41 AM IST
உலக சாம்பியன்ஷிப்: பிவி சிந்து பைனலுக்கு முன்னேற்றம் title=

ஸ்காட்லாந்த் கிளாஸ்கோ நகரில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று  நடைபெற்ற இந்த போட்டியில் 2வது அரையிறுதியில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, 10-வது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யூபே-வை மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிந்து அதிரடியாக ஆடினார். 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் சிந்து சென் யூபே-வை 48 நிமிடத்தில் வெற்றி பெற்றார்.

இறுதி ஆட்டத்தில் சிந்து ஜப்பானின் நசோமி ஒகாராவை சந்திக்கிறார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இது இவரது 3-வது பதக்கமாகும்.

Trending News