உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணியாகக் கருதப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் தோல்வியைத் தழுவி வெளியேறியது. தற்போது உலகக் கோப்பையின் தோல்வியை மறந்துவிட்டு இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு செல்ல தயாராகி வருகிறது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பு, இன்று (ஜூலை 29) மும்பையில் பத்திரிகையாளர் சந்தித்தனர் கேப்டன் விராட் கோலி மற்றும் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
அப்பொழுது விராடி கோலியிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சுதந்திரமாகவும் விரிவாகவும் பதிலளித்தார். ஆனால் ரோஹித் சர்மா தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த விராட் கோலியை தடுத்து, அதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மா தொடர்பான கேள்வி அதிகம் கேட்கப்பட்டது. மேலும் ரோஹித் சர்மாவுடன் என்ன தான் பிரச்சனை? உங்களுக்கு ரோஹித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி வருவது உண்மையா? என செய்தியாளர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த விராட் கோலி, “நானும் சில செய்திகளை கேள்விப்பட்டேன் கேட்டிருக்கிறேன். இதுபோன்ற செய்திகள் வெளியில் இருந்து வருகின்றன. உண்மை என்னவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது. அணியில் எந்தவி பிரச்சனையும் இல்லை என்பதற்கு இதுவே சான்று. அணியில் எல்லோரும் ஒருவருக்கொருவர் மீது நம்பிக்கை மற்றும் மரியாதை வைத்துள்ளனர் எனக்கூறியபடி விராட் வேற ஏதோ சொல்ல வந்தார், அந்த சமயத்தில் அப்பொழுது அவரைத் தடுத்த அணியின் பயிர்ச்சியாளர் ரவி சாஸ்திரி, மிகவும் ஆக்ரோஷமான முறையில், 'இந்திய அணியை விட வேற யாரும் எந்த நபரும் எங்களுக்கு முக்கியம் இல்லை. ஏன் அது நானாக இருந்தாலும் சரி, விராட் அல்லது வேற யாராக இருந்தாலும் சரி" என மிகவும் கோவமாக பேசினார்.