வலுவான நிலையில் இந்தியா; 11 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்த RSA!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் குவித்துள்ளது!

Last Updated : Oct 5, 2019, 06:55 PM IST
வலுவான நிலையில் இந்தியா; 11 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்த RSA! title=

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் குவித்துள்ளது!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி விஷாகப்பட்டினம் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அணியில் அதிகப்பட்சமாக மயங்க் அகர்வால் 215(371), ரோகித் ஷர்மா 176(244) ரன்கள் குவித்தனர். 

இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியில் அதிகப்பட்சமாக டீக் இக்ளர் 160(287), குவின்டன்-டி-காக் 111(163) ரன்கள் குவித்தனர். 

71 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளர் செய்தது. அணியில் அதிகப்பட்சமாக ரோகித் ஷர்மா 127(149) ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக புஜாரா 81(148) ரன்கள் குவித்தார். 

இதனையடுத்து 393 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய டீன் இக்ளர் 2(16) ரன்களில் வெளியேற 11-1 என்று கடினமான துவக்கத்தில் சிக்கியுள்ளது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் குவித்துள்ளது. ஐந்தாம் மற்றும் இறுதி நாளான நாளை 384 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் காண்கிறது.

Trending News