உலக கோப்பை 2019 தொடரின் லீக் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தனது 23-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்தார் ரோகித் ஷர்மா!
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 8-வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் தனது 23-வது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.
இப்போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா இறுதி வரை நின்று விளையாடி 144 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 13 நான்குகள் அடங்கும். எனினும் மறுமுனையில் விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் பெவுளியன் திரும்பியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
What a knock from the HITMAN. Brings up his 23rd ODI ton off 128 deliveries
Live - https://t.co/Ehv6d9cOXp #TeamIndia #CWC19 pic.twitter.com/h0geGk742V
— BCCI (@BCCI) June 5, 2019
ஆட்டத்தின் 47.3-வது பந்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்த இந்தியா உலக கோப்பை 2019 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதே வேளையில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய தென்னாப்பிரிக்கா தொடர்ந்து மூன்று தோல்விகளை கண்டு இக்கட்டான நிலையில் உள்ளது.
இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா தனது 23-வது ஒருநாள் சத்தை பூர்த்தி செய்ததன் மூலம்., அதிக ஒருநாள் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரும், இரண்டாம் இடத்தில் 41 சதங்களுடன் விராட் கோலியும் உள்ளனர்.