ஒருநாள் போட்டிக்கான ICC தரவரிசையில் இந்தியாவின் ரோஹித் ஷர்மா இரண்டார் இடத்திற்கு முன்னேறியுள்ளார்!
கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் ரோகித் ஷர்மாவும், 5-வது இடத்தில் ஷிகர் தவானும் முன்னேறியுள்ளனர். ஆல்ரவுண்டருக்கான தரவரிசைப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
துபாயில் நேற்று முன்தினம் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 317 ரன்கள் குவித்தார். இதையடுத்து, ICC ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் இவர் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே 42 புள்ளிகள் மட்டுமே இடைவெளி உள்ளது.
ICC ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசைப்பட்டியலில் ரோஹித் சர்மா 2-ம் இடத்துக்கு முன்னேறுவது இந்த ஆண்டில் இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த ஜூலை மாதம் 2-வது இடத்துக்கு முன்னேறினார்.
ஆசியக் கோப்பைத் தொடரில் 342 ரன்கள் குவித்து தொடர் நாயகன் பட்டம் வென்ற, ஷிகர் தவண் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 4 முன்னேறி 5-வது இடத்தினை பிடித்துள்ளார்.
ஆசியக் கோப்பைத் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆல்ரவுண்டர் தரவரிசைப்பட்டியலிலில் வங்கதேச வீரர் சஹிப் அல்ஹசனை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 6 இடங்கள் முன்னேறி முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளார்.