மீண்டும் களத்தில் சச்சின் டெண்டுல்கர்; WI அணிக்கு எதிரான போட்டியில்...

அகெடமி ஆஃப் ரோடு பாதுகாப்பு உலகத் தொடரின் வாயிலாக சச்சின் டெண்டுல்கர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார்.

Last Updated : Mar 7, 2020, 06:20 PM IST
மீண்டும் களத்தில் சச்சின் டெண்டுல்கர்; WI அணிக்கு எதிரான போட்டியில்... title=

அகெடமி ஆஃப் ரோடு பாதுகாப்பு உலகத் தொடரின் வாயிலாக சச்சின் டெண்டுல்கர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார்.

அகெடமி ஆஃப் ரோடு பாதுகாப்பு உலகத் தொடரின் முதல் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் இந்தியா லெஜண்ட்ஸ் அணி, பிரையன் லாராவின் விண்டீஸ் லெஜெண்ட்ஸை எதிர்கொள்கிறது. சனிக்கிழமை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சச்சின் மற்றும் லாரா இருவரும் மீண்டும் நேருக்கு நேர் மோதவுள்ளனர். 

(குறிப்பு : இரவு 7:00 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை கலர்ஸ் சினிப்ளெக்ஸில் காணலாம்.)
 
நவம்பர் 14, 2013 போட்டியை அடுத்து சச்சின் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வான்கடே ஸ்டேடியத்தில் இன்று கிரிக்கெட் விளையாடவுள்ளார். இதன் காரணமாக இப்போட்டி மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுவதால் இந்த போட்டி மிகவும் முக்கியமான ஒன்றுகாவும் பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு நபர் சாலை விபத்தில் இறப்பதாக புள்ளியல் தெரிவிக்கிறது. எனவே சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தற்போது இந்த போட்டி விளையாடப்படவுள்ளது.

சுவாரஸ்யமாக, சச்சினின் தொழில் வாழ்க்கையின் இறுதிப் போட்டி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவே அமைந்தது, தற்போது மீண்டும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மேற்கிந்திய தீவுகள் அணியுடனே துவங்கவுள்ளது.

டெண்டுல்கர் மற்றும் லாராவைத் தவிர, இந்திய கிரிக்கெட் வீரர்களான வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங் மற்றும் ஜாகீர் கான், மேற்கிந்தியத் தீவுகளின் ஷிவ்நாரைன் சந்தர்பால் மற்றும் கார்ல் ஹூப்பர், ஆஸ்திரேலியாவின் பிரட் லீ மற்றும் பிராட் ஹாட்ஜ், தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ், இலங்கையின் திலகரத் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோரும் இந்தத் தொடரில் இடம்பெறுகின்றனர்.

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த போட்டியில், மொத்தம் ஐந்து அணிகள் ஒருவருக்கொருவர் ஒரு முறை என ரவுண்ட் ராபின் வடிவத்தில் விளையாடவுள்ளனர். 

மார்ச் 22-ம் தேதி மும்பையில் உள்ள அழகிய பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் லீக் கட்டத்திற்குப் பிறகு முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் லெஜென்ட்ஸ் அணி வீரர்கள் விவரம்:
சச்சின் டெண்டுல்கர் (C), வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், அஜித் அகர்கர், சஞ்சய் பங்கர், முனாஃப் படேல், முகமது கைஃப், பிரக்யன் ஓஜா, சைராஜ் பஹுத்துலே, அபே குருவில்லா, ஜாகீர் கான், இர்பான் பதான், சமீர் திகே

Trending News