மாஸ்டர் பிளாஸ்டர் Sachin Tendulkar-க்கு கொரோனா தொற்று: ட்விட்டர் மூலம் செய்தியை பகிர்ந்தார்

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 27, 2021, 11:01 AM IST
  • சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று.
  • வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார்.
  • ட்விட்டர் மூலம் செய்தியைப் பகிர்ந்தார்.
மாஸ்டர் பிளாஸ்டர் Sachin Tendulkar-க்கு கொரோனா தொற்று: ட்விட்டர் மூலம் செய்தியை பகிர்ந்தார்   title=

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதால், அவர் பரிசோதனையை மெற்கொண்டதாகவும் அவரது பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சச்சின் டெண்டுல்கரின் குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரது சோதனை முடிவுகளும் நேர்மறையாக வந்ததாகவும், அவர்களுக்கு தொற்று இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுறைப்படி சச்சின் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

தனக்கு கொரோனா தொற்று எற்பட்டதை ட்விட்டர் மூலம் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) தெரிவித்தார்.

“கோவிட் தொற்றிலிருந்து தபிக்க, நான் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். இருப்பினும், லேசான அறிகுறிகளைத் தொடர்ந்து நான் பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது. வீட்டில் உள்ள மற்ற அனைவரும் தொற்றுக்கு எதிர்மறையை சோதித்துள்ளனர் ” என்று டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.

‘நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைத்து வித பரிந்துரைகளையும் நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்’ என்று சச்சின் மேலும் தெரிவித்துள்ளார்.

ALSO READ: மீண்டும் லாக்டௌன், பதுங்கிப் பாயும் கொரோனா: 24 மணி நேரத்தில் 62,291 பேர் புதிதாக பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 62,291 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,908,373 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 450,000 ஐ கடந்துள்ளது. 

தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இப்போது 6 வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 161,275 ஆக உயர்ந்தது. 

கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து காணப்படாத விகிதத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று அதிகரித்து வருகின்றது. தடுப்பூசி போடும் செயல்முறை தற்போது நடந்துகொண்டிருந்தாலும், இந்தியவைல் உருவாகி இருக்கும் இரண்டாவது கொரோனா அலை, முதல் அலையை விட மோசமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகிறார்கள். 

ALSO READ: கொரோனா: சானிடைசரில் புற்றுநோயின் ஆபத்து உண்டா? அதிர்ச்சி தகவல்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News