Chennai Super Kings News Tamil Latest : ஐபிஎல் 2025 தொடருக்கு முன் மொத்தம் உள்ள 10 அணிகளும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ஆர்டிஎம் மூலம் 2 பிளேயர்களை ரீட்டெயின் செய்து கொள்ளவும் ஐபிஎல் நிர்வாகம், அனைத்து அணிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விரைவில் ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் தக்க வைத்த பிளேயர்கள் லிஸ்ட்டை ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறது. அப்போது, எந்தெந்த பிளேயர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும். குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் எந்தெந்த பிளேயர்கள் தக்க வைக்கப்பட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அந்த அணியில் தக்க வைக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு அணி நிர்வாகம் இதுவரை வெளிப்படையான பதிலை அளிக்கவில்லை.
மேலும் படிக்க | முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடித்து அசத்தல்! யார் இந்த கம்ரான் குலாம்?
இருப்பினும் எம்எஸ் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு சாதகமாக ஏற்கனவே அமலில் இருந்து நீக்கப்பட்ட பழைய விதியை ஐபிஎல் நிர்வாகம் இம்முறை மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதாவது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடாத பிளேயர்களை அன்கேப்டு பிளேயர் என்ற அடிப்படையில் ஒரு ஐபிஎல் அணி குறைந்த விலையில் தாங்கள் விரும்பும் பிளேயரை தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த விதியை பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறைந்த விலையில் எம்எஸ் தோனியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீட்டெயின் லிஸ்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற விவரத்தை அந்த அணியின் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை தக்க வைப்பது குறித்து இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எம்எஸ் தோனி தக்க வைக்கப்படுவாரா? இல்லையா? என்பதும் இதுவரை முடிவாகவில்லை. என்னை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீட்டெயின் லிஸ்ட் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதிஷா பத்திரனா ஆகியோர் இருக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஆர்டிஎம் மூலம் இரண்டு பிளேயர்களை தங்கள் அணிக்கு கொண்டு வர முடியும் என்பதால் அந்த இரண்டு பிளேயர்கள் யாராக இருப்பார்கள்? என்பதும் சிஎஸ்கே அணி சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது. ஆனால் தோனி பாய் ஏலத்துக்கு வர வாய்ப்பில்லை" என தெரிவித்துள்ளார்.
எம்எஸ் தோனிக்கு இப்போது 43 வயதாகிறது என்பதால் அவர் அதிகபட்சம் இந்த ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டுக்கு முழுமையாக விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்றதுடன், பல அபார சாதனைகளையும் படைத்திருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டே அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்ட எம்எஸ் தோனி, ஒரு பிளேயராக மட்டுமே அணியில் தொடருகிறார். இம்முறை ஒரு பிளேயராக விளையாடுவாரா? என்பது தான் மிகப்பெரிய கேள்வி. இந்த கேள்விக்கான பதில் நவம்பர் தொடக்க வாரத்தில் ஐபிஎல் நிர்வாகம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் இருந்து உறுதியான பதில் வெளியாகும்.
மேலும் படிக்க | CSK: பலமான அணியை உருவாக்க... ஏலத்தில் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்களை சிஎஸ்கே எடுக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ