இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் சனாத் ஜெயசூர்யா மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் ICC விளக்கம் கோரியுள்ளது!
ICC விதிகளை மீறியதாக அதிரடி பேட்ஸ்மேன் சனாத் ஜெயசூர்யா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ICC விதித்துள்ளது. இலங்கை கிரிக்கேட் வாரியத்தின் தேர்வு குழுவில் முக்கிய பொருப்பில் இருக்கும் இவர் ICC சட்டவிதிகளின் இரண்டு விதிகளை மீறியதாக இந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ICC Article 2.4.6-ன் படி - லஞ்ச ஒழிப்பு துறையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு ஒத்துழைக்காதது, லஞ்ச ஒழிப்பு துறையால் கோரப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை வழங்காதது எனும் பிரிவிலும்
- ICC Article 2.4.7-ன் படி - லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காதது, கோரப்பட்ட ஆவணங்களை அழித்தல் அல்லது மறைத்தல் ஆகிய பிரிவிலும். சனாத் ஜெயசூர்யா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
BREAKING: Sanath Jayasuriya has been charged with two counts of breaching the ICC Anti-Corruption Code.
Full details: https://t.co/O4kTg0b1j2 pic.twitter.com/1bJsTg9WTP
— ICC (@ICC) October 15, 2018
இந்நிலையில் இன்று இந்த புகார் தொடர்பாக இன்றிலிருந்து அடுத்த 15 நாட்களுக்குள் சனாத் ஜெயசூர்யா விளக்கம் அளிக்க வேண்டுமென ICC அறிவித்துள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வேறு எந்த தகவலும் ICC தெரிவித்துள்ளது!