விராட் கோலிக்கு ஆதரவாக களமிறங்கிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கங்குலி மீது பாய்ச்சல்

கேப்டன் பதவி சர்ச்சையில் விராட் கோலிக்கு முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் ஆதரவு கிடைத்துள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்று மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 24, 2021, 01:32 PM IST
  • கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலி பேசியிருக்கக் கூடாது
  • கேப்டனை தேர்வு செய்வது அல்லது நீக்குவது என்பது தேர்வுக் குழுவின் முடிவு
  • சௌரவ் கங்குலி vs விராட் கோலிக்கு பதிலாக கோஹ்லி vs சேத்தன் சர்மா ஆக இருந்திருக்க வேண்டும்
விராட் கோலிக்கு ஆதரவாக களமிறங்கிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கங்குலி மீது பாய்ச்சல் title=

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை (Sourav Ganguly) குறிவைத்துள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறவேண்டிய அவசியம் சவுரவ் கங்குலிக்கு தேவையற்றது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (Sanjay Manjrekar) தெளிவாக கூறியுள்ளார். இது தேர்வுக் குழுவின் தலைவரின் பணி. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை விராட் கோலியிடம் இருந்து பிசிசிஐ திடீரென பறித்தது. இதையடுத்து இந்திய கிரிக்கெட்டில் ஒரு பெரிய பூகம்பம் வெடித்தது. விராட் கோஹ்லிக்கும் பிசிசிஐ (Virat vs BCCI) அமைப்புக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை என்பது வெளிச்சம் போட்டு காட்டியது.

டைம்ஸ் நவ் ஊடகத்திடம் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "இதுக்குறித்து பிசிசிஐ தலைவர் ஏன் பொதுவெளியில் பேச வேண்டும் அல்லது அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, உண்மையில் அது தேர்வுக் குழுவின் தலைவரின் வேலை. இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் தேர்வுக் குழுவின் தலைவர் மிகவும் முக்கியமானவர். ஆனால் அவருக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை. ரிக்கி பாண்டிங்கை (Ricky Ponting) உதாரணத்திற்குக் கூறிய மஞ்ச்ரேக்கர், அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது, அவரின் அணி ​​தேர்வாளர்கள் அனைத்தையும் தெளிவுபடுத்தியதாகக் கூறினார்.

மஞ்ச்ரேக்கருக்கு முன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கரும், தேசிய தேர்வாளர்கள் சார்பில் கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலி பேசியிருக்கக் கூடாது என்று கூறியிருந்தார். வீரர்கள் தேர்வு அல்லது கேப்டன் பதவி விஷயத்தில் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா (Chetan Sharma) தான் பேசியிருக்க வேண்டும். கேப்டனை தேர்வு செய்வது அல்லது நீக்குவது என்பது தேர்வுக் குழுவின் முடிவு. இது கங்குலியின் எல்லைக்குள் வராது.

ALSO READ |  "நேருக்கு நேர் பேசுங்கள்" - ஷாகித் அப்ரிடி கருத்து!

20 உலகக் கோப்பை 2021 தொடங்குவதற்கு முன்பே, விராட் கோலி (Virat Kohli)  டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக நீடிக்க விரும்பியதாகக் விராட் கூறியதாகவும்,  ஆனால் டி20 உலகக் கோப்பையில் (T20 World Cup 2021) இந்திய அணி ஏமாற்றம் அளித்ததையடுத்து, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி திடீரென நீக்கப்பட்டு ரோஹித் சர்மாவுக்கு (Rohit Sharma) கேப்டன் பதவி வழங்கப்பட்டது. டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கோஹ்லியிடம் கேட்டுக் கொண்டதாக சவுரவ் கங்குலி பின்னர் தெரிவித்தார்.

இருப்பினும், கங்குலியின் கூற்றை மறுத்த விராட் கோலி, கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று என்னிடம் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்தார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணி தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன், ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தகவல் கிடைத்தது எனவும் விராட் கூறினார்.

மஞ்ச்ரேகரின் கூற்றுப்படி, கோஹ்லி-கங்குலி விவகாரமானது "சௌரவ் கங்குலி vs விராட் கோலிக்கு பதிலாக கோஹ்லி vs சேத்தன் சர்மா (தலைமை தேர்வாளர்) ஆக இருந்திருக்க வேண்டும்" என்றார்.

ALSO READ | தோனியா? கோலியா? 2021-ல் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News