Video: Dhawan மனைவின் பேட்டிங் திறமையை பார்த்துள்ளீரா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டகாரர் சிகர் தவான் தன் மனைவி மக்களுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சி வைரலாகி வருகிறது!

Last Updated : Mar 31, 2018, 03:47 PM IST
Video: Dhawan மனைவின் பேட்டிங் திறமையை பார்த்துள்ளீரா? title=

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டகாரர் சிகர் தவான் தன் மனைவி மக்களுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சி வைரலாகி வருகிறது!

IPL போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், தொடருக்கு முன்னதாக தன் குடும்பத்தாருடன் நேரத்தினை செலவிட தவான் தன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர் கடற்கரையில் தன் மனைவியுடன் அவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோவினை அவர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோ குறித்து அவர் குறிப்பிடுகையில்... சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தால் என்ன?, மனைவி கேட்டால் பந்துவீச்சாளராக மாறி தானே ஆக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

தன் குடும்பத்தாருடன் விடுமுறையினை கொண்டாடும் நிகழ்வுகளை அவர் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தினில் பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் இந்த வீடியோவினையும் அவர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News