இந்திய அணிக்கு ஷாக்... வீடு திரும்பும் சுப்மான் கில் - பாகிஸ்தான் போட்டிக்கும் வாய்ப்பில்லை...?

Shubman Gill Health Update: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சுப்மான் கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சற்று சீரானதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 10, 2023, 11:46 AM IST
  • சுப்மான் கில் முதல் போட்டியில் விளையாடவில்லை.
  • இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிப்பு.
  • மருத்துவ குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்திய அணிக்கு ஷாக்... வீடு திரும்பும் சுப்மான் கில் - பாகிஸ்தான் போட்டிக்கும் வாய்ப்பில்லை...? title=

Shubman Gill Health Update: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) இந்தியாவில் கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கும் இத்தொடரில், மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. குறிப்பாக, சொந்த மண்ணில் இந்த கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

தீடீர் ட்விஸ்ட்

சொந்த மண்ணில் நடக்கும் தொடர் என்பதை விட இந்திய அணி அனைத்து பிரிவிலும் வலுவாக இருப்பது மற்றொரு காரணம். ஓப்பனிங்கில் அதிரடியும் (சுப்மான் கில்), அனுபவமும் (ரோஹித்) இருக்க மிடில் ஆர்டரில் விராட், ஷ்ரேயாஸ், கே.எல். ராகுல், ஹர்திக், ஜடேஜா ஆகியோரும் இவர்களுக்கு பேக்-அப்பாக இஷான் கிஷன், சூர்யகுமாரும் இருக்கின்றனர். பந்துவீச்சிலும் இந்தியா உலகத் தரத்தில் உள்ளது. 

ஆசிய கோப்பையை வென்றது, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றது என இந்திய அணிக்கு அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருக்க உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன் இந்தியாவின் தலையில் ஓர் இடி விழுந்தது எனலாம். இரண்டு பயிற்சி போட்டிகளும் ரத்தான நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் விளையாடுவதற்காக சென்னை வந்திருந்தது. 

மேலும் படிக்க | இந்து விரோத பதிவு... உலகக் கோப்பைக்கு இந்தியா வந்த தொகுப்பாளர் பாகிஸ்தான் திரும்பினார்!

பிசிசிஐயின் அறிவிப்பு

அப்போது, இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரும், நட்சத்திர வீரருமான சுப்மான் கில்லுக்கு (Shumban Gill) உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்றும் பிசிசிஐ சார்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. மேலும், நாளை (அக். 11) ஆப்கானிஸ்தான் (IND vs AFG) அணிக்கு எதிராக டெல்லியில் நடக்கும் போட்டியிலும் சுப்மான் கில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்தது. 

காவேரி மருத்துவமனையில் சுப்மான் கில்

அதன்படி, இந்திய வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட நிலையில், சுப்மான் கில் சென்னையிலேயே தங்கவைக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தற்போது அவரின் தட்டணுக்களின் (Platelets) எண்ணிக்கை குறைந்து வருவதால் அவரை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கண்காணிப்பில் கில்

சுப்மான் கில்லின் உடல்நிலை முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு உன்னிப்பாக தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அவரால் விளையாட முடியாத நிலையில் உள்ளார். அவரது தட்டணுக்களின் (Platelets) எண்ணிக்கை குறைந்து வருகிறது எனவும் அத்தகைய சூழ்நிலையில் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் இருப்பதால் உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தொடர்ந்து, அவரின் உடல்நிலை சீரானதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் எனவும், வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி?

இருப்பினும், சுப்மான் கில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைானத்தில் அக். 14ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் (IND vs PAK) விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது, இருப்பினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த போட்டியில் சுப்மான் கில்லுக்கு பதிலாக ஓப்பனிங் இறங்கிய இஷான் கிஷன் டக்-அவுட்டானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கில்லுக்கு பதில் இஷான் வேண்டாம்... இவரை போடுங்க - அதிரடி ஆட்டம் கன்பார்ம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News