விராட் கோலி கேப்டன்சி குறித்து மவுனம் கலைத்த சவுரவ் கங்குலி.. என்ன நடந்தது?

Sourav Ganguly And Virat Kohli Controversry: விராட் கோலி கேப்டன் பதவி குறித்து ஏற்பட்ட சர்ச்சைப் பற்றி பேசிய சவுரவ் கங்குலி. நான் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 5, 2023, 03:06 PM IST
  • கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் விலகக்காரணம் என்ன?
  • டி20 அணிக்கு கேப்டனாக தொடர விராட் மறுத்துவிட்டார் -கங்குலி
  • விராட் சம்பத்தத்துடன் தான் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கினோம்- கங்குலி
விராட் கோலி கேப்டன்சி குறித்து மவுனம் கலைத்த சவுரவ் கங்குலி.. என்ன நடந்தது? title=

சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி சர்ச்சை: சில ஆண்டுகளுக்கு முன்பு, சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையே மோதல் என நிறைய தலைப்புச் செய்திகள் வெளியானது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டது தொடர்பாக இந்த சர்ச்சை ஏற்பட்டது, அதன் பிறகு விராட் கோலி அனைத்து வடிவ இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பிசிசிஐ தலைவராக சௌரவ் கங்குலி இருந்த போது கேப்டன் பதவி தொடர்பாக விராட்டுடன் நடந்தது என்ன என்று கூறியுள்ளார்.

விராட் கேப்டன்சியின் கீழ் அணியின் செயல்பாடு எப்படி இருந்தது?

இந்திய அணியின் சிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு, விராட் கோலி நீண்ட காலம் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் டீம் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தார். ஆனால் ஐசிசி கோப்பையை ஒரு முறை கூட வெல்ல முடியவில்லை. விராட்டின் கேப்டன்சியின் கீழ், டீம் இந்தியா ஒவ்வொரு வடிவத்திலும் நம்பர்-1 அணியாக மாறியது. அனைத்து அணிகளையும் தோற்கடித்தது மற்றும் வெளிநாட்டு ஆடுகளங்களில் கூட இந்திய அணி வென்றது. ஆனால் ஐசிசி தொடரில் ஒரு முறை கூட கோப்பையை அந்த அணியால் வெல்ல முடியவில்லை என்பது நிதர்சனம்.

சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையே மோதல் ஏன்?

அப்போதைய தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை விராட் கோலியிடம் இருந்து பிசிசிஐ திடீரென பறித்தது. இதையடுத்து இந்திய கிரிக்கெட்டில் பூகம்பம் வெடித்தது. விராட் கோஹ்லிக்கும் பிசிசிஐ அமைப்புக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை என்பது வெளிச்சம் போட்டு காட்டியது. அப்போதைய பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) மற்றும் விராட் கோலி (Virat Kohli) இடையே மோதல் என செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளியானது.

கேப்டன் பதவியை விட்டு வெளியேறிய விராட் கோலி

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடங்குவதற்கு முன்பே, விராட் கோலி உலகக் கோப்பை 2021 தொடருக்கு பிறகு டி 20 வடிவத்தின் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு முன்பாக நடந்த ஐசிசி தொடரிலும் விராட் தலைமையிலான இந்திய அணியும் தோல்வியடைந்தது. அதன் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக தொடர விராட் மறுத்துவிட்டார். அப்போது பிசிசிஐயின் தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி இருந்தார். அவர் கேப்டன்சி குறித்து விராட்டுடன் பேசியுள்ளார். அதன் பிறகு விராட் அனைத்து வடிவங்களிலிருந்தும் கேப்டன் பதவியை விட்டு வெளியேறினார்.

மேலும் படிக்க - விராட் கோலி 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு? பிசிசிஐ போடும் கண்டிஷன்

கேப்டன் பதவியில் இருந்து விராட்  விலகக் காரணம் என்ன?

ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்குவது குறித்த தகவல் டெஸ்ட் அணியின் அறிவிப்புக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தான் வழங்கப்பட்டதாக விராட் கூறியிருந்தார். அதே நேரத்தில் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும்போது ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருக்க விரும்புவதாக நான் தெளிவுபடுத்தி இருந்தேன் என விராட் கூறியிருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டன் பதவி குறித்து, விராட் கோலி தனது அறிக்கை ஒன்றில், ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து தன்னுடன் எந்த விவாதமும் இல்லை என்று கூறியிருந்தார். அதன் பிறகு விராட் டெஸ்ட் வடிவத்தின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ரோஹித் சர்மா மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

விராட் சம்மதத்துடன் தான் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கினோம் -கங்குலி

இதற்கு முன்னதாக அப்போதைய பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly), "டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய போது, அவரை பதவி விலக வேண்டாம் என்று தடுத்ததாகவும், ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன், டி-20 அணிக்கு ஒரு கேப்டன் என இரண்டு பேர் ஒரே நேரத்தில் இருக்க முடியாது என்பதால் தாங்களே கேப்டன் பதவியில் தொடர வேண்டும் என்று அவரிடம் கூறியதாக கங்குலி தெரிவித்திருந்தார். மேலும் அவரிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி, அவரின் சம்பத்தத்துடன் தான் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

மேலும் படிக்க - பிசிசிஐயிடம் விராட் கோலி சொன்ன அந்த விஷயம்... இனி எப்போது விளையாடுவார்?

விராட்டுடன் என்ன நடந்தது? சவுரவ் கங்குலி விளக்கம்

தற்போது அந்த சம்பவம் குறித்து தாதாகிரி அன்லிமிடெட் சீசன் 10-ன் போது பேசிய சவுரவ் கங்குலி, கேப்டன் பதவி தொடர்பாக விராட்டுடன் பேசிய உரையாடலை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில், "விராட் கோலியை நான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை. டி20யில் நீங்கள் அணியை வழிநடத்த விரும்பவில்லை என்றால், ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியும் விட வேண்டியிருக்கும் என அவரிடம் நான் சொன்னேன். அதுதான் சிறந்தது எனவும் கூறினேன்" என்றார். 

விராட்டுக்குப் பிறகு, மூன்று அணிக்கும் ஒரே கேப்டன் கிடைக்கவில்லை

விராட் கோலிக்குப் பிறகு, இந்திய அணிக்கு இதுவரை மூன்று வடிவங்களுக்கும் ஒரு கேப்டனைப் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ கிட்டத்தட்ட ஒவ்வொரு தொடரிலும் புதிய கேப்டன்களைக் கொண்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் பல வீரர்கள் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உள்ளனர். டிசம்பரில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் கூட, டீம் இந்தியாவின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ், ஒருநாள் கேப்டனாக கேஎல் ராகுல், டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - கோலிக்கு எச்சரிக்கையா ?மவுனத்தை கலைத்த கங்குலி "தக்க நேரத்தில் பதில் அளிப்போம்"

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News