ராயன் முதல் நாள் வசூல் நிலவரம்.. வசூல் வேட்டையில் தனுஷ்

Dhanush Raayan Box Office Collection Day 1: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வரை ராயன் திரைப்படம் செய்துள்ளது வசூல் நிலவரம் எவ்வளவு என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 26, 2024, 02:57 PM IST
  • தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் ராயன்.
  • படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம்.
  • தனுஷின் 50வது படம் ராயன்.
ராயன் முதல் நாள் வசூல் நிலவரம்.. வசூல் வேட்டையில் தனுஷ் title=

 

Dhanush Raayan Box Office Collection Day 1: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வரை ராயன் திரைப்படம் செய்துள்ளது வசூல் நிலவரம் எவ்வளவு என்று பார்ப்போம்.

ராயன் திரைப்படம்:
தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ராயன் திரைப்படம், இவரது 50வது படமாகும். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதனுடன் கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கெத்துக்காட்டியதா ராயன்.. தனுஷ் 50 கலக்கலா? சொதப்பலா? முதல் விமர்சனம் இதோ

தற்போது இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

ராயன் விமர்சனம்:
இதனிடையே ராயன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இது, கேங்க்ஸ்டர் டிராமா என்பதால் பெரிதும் குடும்பத்துடன் இந்த படத்திற்கு யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும், படத்தின் முதல் பாதி பயங்கரமாக இருப்பதாகவும், அடுத்த பாதி கொஞ்சம் சொதப்பலாக இருப்பதாகவும் ஒரு சிலர் தங்களின் விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். படம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

ராயன் திரைப்படத்தின் வசூல் நிலவரன்:
இந்த நிலையில், தனுஷ் நடிப்பில் வெளியான படங்களிலேயே கர்ணன் திரைப்படம் தான் முதல் நாளில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது, அந்த வகையில் தற்போது ராயன் திரைப்படமும் முதல் நாளில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சாதனையை படைக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இன்றைய நாள் இறுதியில் தான் முழு விவரம் வெளியாகும் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க | ராயன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு? தெரிந்தால் வாயை பிளப்பீர்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News