தென்னாப்பிரிக்கா Vs மேற்கிந்திய தீவுகள்: ICC டி20 உலகக் கோப்பை 2021 இல் இன்று (அக்டோபர் 26) நடைபெற்ற முதல் போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டியாகும்.
இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. சூப்பர்-12 இன் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அதே சமயம், நடப்புச் சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுபோன்ற சூழ்நிலையில், இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், இந்தப் போட்டியில் இரு அணிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் களத்தில் சந்தித்தன.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, முதலில் பேட்டிங் செய்த நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் எவின் லூயிஸின் அரைசதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. லீவிஸ் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் அடித்தார். கேப்டன் கீரன் பொல்லார்ட் 26 ரன்கள் எடுத்தார்.
ALSO READ | 11 ஆல்ரவுண்டர்கள் இருந்தும் பரிதாப நிலையில் மேற்கிந்திய தீவுகள்!
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேசவ் மஹராஜ், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ககிசோ ரபாடா மற்றும் நார்ட்ஜே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைபற்றினார்கள்.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் விக்கெட்டை சீக்கரமாக இழந்தாலும், அதன் பிறகு நன்றாக ஆடி வெற்றியை நோக்கி அணியை அழைத்து சென்றனர். கடைசி 12 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில், மார்க்ராம் ஒரு பெரிய 6 அடித்தார். அதன்பிறகு வெற்றிக்கு தேவையான 1 ரன் அடுத்து, தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் அருமையாக விளையாடி வெற்றி பெற்றனர்.
ALSO READ | Over Confidence-ஆல் சொதப்பிய இந்தியா! பாகிஸ்தான் அபார வெற்றி!
இன்றைய போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் ஒட்டுமொத்த அணியும் 14.2 ஓவர்களில் வெறும் 55 ரன்களுக்குச் சுருண்டது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR