இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத் லயன்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில மோதின.
டாஸில் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் குஜராத் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 32 பந்தில் 50 ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
அடுத்து ஆடிய ஐதராபாத் அணிக்கு தொடக்கத்தில் தனது விக்கெட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக பறிகொடுத்தது. அதாவது ஷிகர் தவான் 0 ரன் ஹென்ரிக்ஸ் 11 ரன், யுவராஜ்சிங் 8 ரன், தீபக் ஹூடா 4 ரன், பென் கட்டிங் 8 ரன், நமன் ஓஜா 10 ரன் என வீர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஆனால் கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் நிதானமாக நிலைத்து நின்று தனிஒரு வீரராக அணியை சரிவில் இருந்து மீட்டார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட போது முதல் பந்தில் பவுண்டரி விளாசினார். 2-வது பந்தை மீண்டும் பவுண்டரிக்கு அனுப்பி தனது அணிக்கு வெற்றி தேடி தந்தார். வார்னர் 58 பந்துகளில் 93 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அவர் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடித்திருந்தார்.
இந்த வெற்றி மூலமாக முதல் முறையாக இறுதி ஆட்டத்திற்குள் ஐதராபாத் அணி நுழைந்தது.
நாளை நடைபெறும் இறுதி போட்டியில் ஐதராபாத் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மோதுகிறது. இப்போட்டி பெங்களூரு சின்னுசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும். இவ்விரு அணிகளும் முதல் முறையாக இறுதி போட்டியில் நுழைந்துள்ளது.