ஐபிஎல் 2021 போட்டிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாய்க்கு வந்து விட்டது. இன்னும் அனைத்து அணிகளுக்கும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளதால் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணியும் இன்னும் ஒரு போட்டியில் வென்றால் பிளே ஆப்பிர்க்கு தகுதி பெற்றுவிடும். நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற நான்கு அணிகள் போட்டி போட்டுக்கொண்டு உள்ளன.
இன்று மதியம் தொடங்கவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியம் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி ஷார்ஜாவில் நடைபெற உள்ளதால் சிக்ஸர் மழையை எதிர்பார்க்கலாம். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இன்று பெங்களூர் அணி வெற்றி பெறும் பட்சத்தில் தனது பிளே ஆப் கனவை உறுதி செய்துவிடும். மறுபுறம் பஞ்சாப் அணி 12 போட்டிகளில் ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் மீதமுள்ள போட்டிகளில் விலகி விலகி உள்ளதால் அந்த அணிக்கு இது ஒரு பெரும் இழப்பாக உள்ளது.
மாலை 7.30க்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே ப்ளே ஆப்பிற்கு செல்லும் தகுதியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இழந்துள்ளது. புள்ளி பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப்பிர்க்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. இதனால் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
ALSO READ T20 World Cup இல் வைல்ட் கார்டு என்ட்ரி; ருதுராஜ் கெய்க்வாட்க்கு அதிக வாய்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR