டி20 உலகக் கோப்பை 2024: பாகிஸ்தான் முக்கிய வீரருக்கு காயம்..! இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விலகல்?

டி20 உலக கோப்பை போட்டி பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் காயமடைந்துள்ளார். அவர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 5, 2024, 03:18 PM IST
  • பாகிஸ்தான் முக்கிய வீரர் காயம்
  • அமெரிக்காவுக்கு எதிராக ஆடமாட்டார்
  • இந்தியாவுக்கு எதிராக ஆடுவாரா? பாபர் விளக்கம்
டி20 உலகக் கோப்பை 2024: பாகிஸ்தான் முக்கிய வீரருக்கு காயம்..! இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விலகல்? title=

T20 உலகக் கோப்பை 2024 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஜூன் 9 ஆம் தேதி மோத உள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு கெட்ட செய்தி வந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார். இதை கேப்டன் பாபர் அசாம் உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி ஜூன் 6ம் தேதி போட்டியில் முதல் போட்டியில் விளையாட உள்ளது. தொடக்க ஆட்டத்தில் அந்த அணி மெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இமாத் வாசிம் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் அவர் முழு உடல் தகுதியை பெற்றுவிடுவார் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கேதர் ஜாதவ் : தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்

பயிற்சியின் போது காயம்

அண்மையில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடியது. இந்த தொடரின் நடுப்பகுதியில், ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம் பயிற்சியின் போது காயமடைந்தார். அவருக்கு விலா எலும்பில் வலி இருந்ததால், அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முதல் போட்டியில் இருந்து அவர் விலகுவதாக கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

பாபர் ஆசம் என்ன சொன்னார்?

அமெரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தானின் தொடக்க ஆட்டத்திற்கு முன் பேட்டியளித்த பாபர், 'இமாத் வாசிம் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. அதேநேரத்தில் பயப்படும் அளவுக்கான காயமும் இல்லை. காயத்தில் இருந்து இமாம் வாசிம் முன்னேறிக் கொண்டிருக்கிறார். நாங்கள் மருத்துவக் குழுவுடன் கலந்துரையாடியுள்ளோம். எனவே முதல் போட்டிக்கு இல்லை. ஆனால் மீதமுள்ள போட்டிகளுக்கு அவர் இருப்பார் என்று நம்புகிறோம் என கூறினார்.

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி

பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சாம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் ஷாஹ்மான் அஃப்ரிடி மற்றும் உஸ்மான் காந்தி.

மேலும் படிக்க | அயர்லாந்து போட்டியிலும் இந்திய அணிக்கு ஆபத்து வரலாம்... இந்த 3 வீரர்கள் ரொம்ப முக்கியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News