ஐபிஎல் 2023 மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒருமுறை களம் காண்கிறது. குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிஎஸ்கே களம் காண உள்ளது. மஞ்சள் படையின் சேப்பாக்கம் ஆட்டத்தை காண கோடிக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், மீண்டும் ஒருமுறை சிஎஸ்கே இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஒருவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அந்த ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு மிகப்பெரிய தோல்வியை சந்தித்த சிஎஸ்கே, இம்முறை அந்த தோல்வியில் இருந்து மீண்டு அசுர பலத்துடன் விளையாட காத்திருக்கிறது. தோனிக்கு இந்த ஐபிஎல் தொடர் கடைசி தொடராக இருக்கும் என நம்பப்படுவதால், ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் சிஎஸ்கேவுக்கு விடை கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார்.
பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமே ஆல்ரவுண்டர்கள் தான். பிராவோ, மொயீன் அலி, ஜடேஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே சிஎஸ்கே அணியில் இருந்தனர். ஆனால் இம்முறை பிராவோ அணியில் இல்லை. அவருக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ், அந்த இடத்தில் விளையாட இருக்கிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என உலகின் முன்னணி வீரராக இருக்கும் அவர் மீது சென்னை சூப்பர் கிங்ஸ் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாகவும் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இறுதியில் புறப்படும் ஸ்டோக்ஸ்
அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிளேயராக பார்க்கப்படும் பென்ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடர் முடிவதற்கு முன்பாகவே சொந்த ஊருக்கு கிளம்ப முடிவெடுத்திருக்கிறார். ஒருவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால்கூட அந்தப் போட்டியில் விளையாட அவர் இருக்க மாட்டாராம். இங்கிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அப்போது விளையாட வேண்டியிருப்பதால், தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு சொந்த ஊருக்கு கிளம்புகிறாராம். இது சிஎஸ்கேவுக்கு பின்னடைவாக இருந்தாலும், இறுதிப் போட்டி முன்னேறினால் மட்டுமே இத்தகைய தர்மசங்கமான சூழல் ஏற்படும்.
மேலும் படிக்க | இந்திய அணியில் இந்த வீரரின் கேரியர் முடிந்துவிட்டது! பிசிசிஐ திடீரென எடுத்த முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ