கிரிக்கெட்டில் வினோதமான கோமாளித்தனங்களை செய்த பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Batsmen முக்கியமான பேட்டிங் இன்னிங்ஸுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு செய்த முதல் விசித்திரமான விஷயங்கள் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 12, 2023, 07:24 PM IST
  • முக்கியமான போட்டிகளுக்கு முன் மொக்கை வாங்கிய பேட்ஸ்மென்கள்
  • களத்தில் இறங்குவதற்கு முன் பேட்ஸ்மேன்கள் செய்த சுவாராசியமான சொதப்பல்கள்
  • ரோஹித் ஷர்மாவுக்கு இவ்வளவு மறதியா?
கிரிக்கெட்டில் வினோதமான கோமாளித்தனங்களை செய்த பேட்ஸ்மேன்களின் பட்டியல்  title=

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட WTC இறுதிப் போட்டிகளில் இந்திய அணி சொதப்பியது பலரின் விமர்சனங்களை கடுமையாக்கியது. ஆனால், விளையாட்டில் இது சகஜமப்பா என்று இயல்பாக எடுத்துச் செல்லும் ரசிகர்களும் உண்டு. அவர்கள், இந்த உலகப்போட்டியில் வெற்றித் தோல்விகளைத் தாண்டி, கிரிக்கெட்டர்கள் செய்த கோமாளித்தனங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கிரிக்கெட் ஆடுகளத்தில் இறங்குவதற்கு முன், வினோதமான சம்பவங்கள் பல நடக்கும். சில கிரிக்கெட் வீரர்கள் வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவது சுவராசியமானதாக இருக்கும். அதில், ரோஹித் ஷர்மாவின் மறதி முதல் பால்கனியில் மார்னஸ் லாபுஷாக்னேவின் தூக்கம் என ரசிகர்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை.

பாவம் பதட்டத்தில் இப்படி செய்துவிட்டார்கள் என்று சில ரசிகர்கள் சொன்னாலும், நடந்து முடிந்தவற்றை மாற்ற முடியுமா? அப்படி பேட்ஸ்மென்கள் முக்கியமான சர்வதேசப் போட்டிகளுக்கு முன்னதாக செய்த கோமாளித்தனங்களின் தொகுப்பு இது.

WTC 2023 இறுதிப்போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற WTC இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லாபுஷாக்னே, பால்கனியில் அமர்ந்திருக்கும்போது கண் அசந்துவிட்டார். எதிர்பாராத விதமாக அவர் உறங்கிய நேரத்தில், அவரது அணி வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் பேட்டிங் செய்துக் கொண்டு இருந்தனர். முகமது சிராஜின் பந்து வீச்சை,  வார்னர் நிக் செய்தபோது லாபுஷாக்னேவின் தூக்கம் கலைந்தது.

மேலும் படிக்க - ICC ODI World Cup 2023: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பற்றி வெளியானது முக்கிய தகவல்!

பேட் இல்லாமல் பேட்டிங் செய்யச் சென்ற ரோஹித் ஷர்மாவின் மறதி 

ஒரு அசாதாரண நிகழ்வில், இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா ஒருமுறை மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது பேட்டிங் செய்ய சென்றபோது, தனது மட்டையைக் கொண்டுவர மறந்துவிட்டார்.

கையுறைகளை அணிந்திருந்தாலும், கிரிக்கெட் மட்டையை எடுத்துவர மறந்து அவர் அசடு வழிய, அவரை இக்கட்டான தருணத்தில் இருந்து காப்பாற்றி, டிரஸ்ஸிங் ரூமில் இருந்து ஒருவர் மட்டையைக் கொண்டு வந்து கொடுத்தனர்.  

நீல் மெக்கென்சியின் விசித்திரமான ப்ரீ-பேட்டிங் சடங்குகள்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் நீல் மெக்கென்சி வித்தியாசமான மூடநம்பிக்கைகளைக் கொண்டிருந்தார். அவரது இன்னிங்ஸுக்கு முன், டிரஸ்ஸிங் அறையில் உள்ள அனைத்து கழிப்பறை இருக்கைகளும் மூடியிருப்பதை பேட்டிங் செய்யப் போவதற்கு முன் அவர் உறுதி செய்வார்.

அதுமட்டுமல்ல, அவர் விளக்குகளை அணைத்துவிட்டு செல்ல விரும்புவார். இப்படி பல நம்பிக்கைகளை நீல் மெக்கென்சி கொண்டிருந்தார்.  

மேலும் படிக்க - WTC Final 2023: எங்கள் தோல்விக்கு அவர்கள் இருவர் தான் காரணம் - இறுதிப்போட்டிக்கு பின் ரோஹித் சர்மா!

"ஷவர் சர்ப்ரைஸ்: கபில்தேவின் மறக்கமுடியாத ரஷ் டு தி கிரீஸ்"

புகழ்பெற்ற இந்திய கேப்டன் கபில் தேவ் 1983 உலகக் கோப்பை ஆட்டத்தின் போது ஜிம்பாப்வேக்கு எதிரன போட்டியில் வித்தியாசமான அனுபவத்தை எதிர்கொண்டார் குளித்துக்கொண்டிருந்த கபில் தேவின் குளியலறைக் கதவைத் தட்டிய சக வீரர்கள், அவரது பேட்டிங் செய்யும் முறை என்று தெரிவித்தனர். அவசரத்தில் ஓடிப் போய் ஆடினாலும், கபில்தேவ், சூப்பராக விளையாடினார். அந்த ஆட்டத்தில், கபில் தேவ் ஆட்டமிழக்காமல் 175 ரன்களை அடித்து, கிரிக்கெட் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தார்.

சவுரவ் கங்குலி பேட்டிங்கிற்கு தயாராவதற்கு ஐந்து வீரர்களின் உதவி

2007 ஆம் ஆண்டு கேப்டவுனில் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியின் போது, விவிஎஸ் லக்ஷ்மண், பேட்டிங் செய்ய வேண்டிய தருணம் ஏற்ப்ட்டபோது மழை வந்தது. நேரக் கட்டுப்பாடு காரணமாக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலியை பேட்டிங் செய்யச் சொன்னார். இருப்பினும், கங்குலி தயாராக இல்லை.

எனவே, ஆளுக்கொரு வேலையாக செய்து ஐந்து வீரர்கள் அவருக்கு ஆடை அணிவித்து விளையாட தயார் செய்தார்கள். சக வீரர்கள் செய்த உதவி என்ன தெரியுமா/ சட்டை, கால்சட்டை அணிவதில் உதவி, மட்டை மற்றும் பேட்களை எடுத்துக் கொடுப்பது, என அவருக்கு 10 கைகள் உதவி செய்தன.

மேலும் படிக்க - லியோனல் மெஸ்ஸின்னா சும்மாவா? சமூக ஊடகங்களில் தூள் கிளப்பும் கால்பந்து ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News