US Open 2019: டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறிய ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் காயம் காரணமாக நடப்பு சாம்பியன் ஜோகோவிச் பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார்!!

Last Updated : Sep 2, 2019, 10:27 AM IST
US Open 2019: டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறிய ஜோகோவிச்! title=

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் காயம் காரணமாக நடப்பு சாம்பியன் ஜோகோவிச் பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார்!!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.

இதில் வாவ்ரிங்கா 6-4, 7-5, 2-1 என முன்னிலை பெற்றபோது, ஜோகோவிச்சுக்கு காயம் ஏற்பட்டது. மூன்றாவது செட் நடந்து கொண்டிருந்த போது தோள்பட்டை காயத்தால் அவதியடைந்த ஜோகோவிச் போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதனால் வாவ்ரிங்கா காலிறுதி சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார்.

 

Trending News