சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய தெம்புடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்தெடுத்தது. வழக்கம்போல் கோலியும், கேப்டன் பாப் டூபிளசிஸூம் ஓபனிங் இறங்கினர். இந்தப் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 3வது கோல்டன் டக் அவுட்டாகும்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022-ல் 20வது ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்
ஒட்டுமொத்தமாக 6வதுமுறையாக கோல்டன் டக்அவுட்டாகியிருக்கிறார் கோலி. அவர் அவுட்டானால் என்ன? பட்டிடாரும், டூபிளசிஸூம் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டூபிளசிஸ் 50 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். பட்டிடார் 38 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார். 24 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 33 ரன்கள் எடுத்தார்.
இந்த சீசனில் உட்சபட்ச ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக், வந்தவுடன் வாண வேடிக்கையை ஆரம்பித்தார். 8 பந்துகளில் 30 ரன்கள் விளாசிய அவர், 4 சிக்சர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் எடுத்தார். இவரின் அதிரடியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. வான்கடே மைதானத்தைப் பொறுத்தவரை இந்த இலக்கு அடிக்கக்கூடியது என்பதால், நம்பிக்கையுடன் பேட்டிங் இறங்கியது சன்ரைசர்ஸ் அணி.
ஆனால் அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதுவே அந்த அணியின் தோல்விக்கு தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது. பின்னர் வந்த வீரர்கள் யாரும் எதிர்பார்த்த அளவுக்கு அதிரடியில் முனைப்பு காட்டவில்லை. திரிபாதி மட்டும் தன் பங்கிற்கு 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிபோல் விளையாடி மார்க்ரம் 27 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேற மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் நடையைக் கட்டினர். இதனால், பெங்களூரு அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6 வெற்றிகளை பெற்றுள்ள அந்த அணி புள்ளிப்பட்டியில் 4வது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | IPL2022: குஜராத் - லக்னோ வெற்றிக்கு முக்கியமான 3 காரணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR