இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கையை பகிர்ந்துள்ளார். அதில் 7 ஆண்டுகள் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது என விராட் கோலி (Virat Kohli) தெரிவித்துள்ளார்.
தனது கடிதத்தில், "ஏழு வருட கடின உழைப்பை செலுத்தி, இடைவிடாத விடாமுயற்சியுடன் தினமும் போராடி இந்திய அணியை சரியான திசையில் கொண்டு செல்ல முயற்சித்தேன். அனைத்து விஷயங்களும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக, எனக்கு அந்த நேரம் இப்போது வந்துள்ளது. தற்போது பதவியில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரம்" என்று கூறியுள்ளார்.
மேலும் தனது கடிதத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பிசிசிஐ, முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் எம்எஸ் தோனி (MS Dhoni) ஆகியோருக்கு தனது சமூக ஊடக அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.
— Virat Kohli (@imVkohli) January 15, 2022
ஏற்கனவே டி-20 போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதற்கு அடுத்து, ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவr இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்துமா ராஜினாமா செய்திருப்பதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ நீக்கியது. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் முடிந்தவுடன் ராஜினாமா செய்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.
2014-15 சீசனில் விராட் கோலி, எம்எஸ் தோனிக்கு பதிலாக முழுநேர கேப்டனானார். 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன், இந்திய கிரிக்கெட்டின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக கோலி தனது கேப்டன் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
விராட் கோலியின் கீழ், இந்திய கிரிக்கெட் அணி ஒரு ஆக்ரோஷமான அணியாக வலம் வந்தது. அதுவும் அவரின் தலைமையில் இந்தியாவில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது.
தனது அச்சமற்ற ஆக்ரோஷமான அணுகுமுறை மற்றும் புதுமையான யுக்திகளைப் புகுத்தி இந்திய அணியை ஒரு மிகச்சிறந்த அணியாக ஆக்கினார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களின் வரிசை பட்டியலில் விராட்டுக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ALSO READ | அம்பயர்களால் இந்திய அணிக்கு கிடைத்துள்ள பரிசு..!
ALSO READ | INDvsSA: இந்திய அணிக்கு தொடரும் வரலாற்று சோகம்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR