மூன்று முறை டக் அவுட்... பேட்டியில் கண் கலங்கிய விராட் கோலி

நடப்பு ஐபிஎல் தொடரில் 3 முறை டக் அவுட் ஆனது குறித்து பேசுகையில் விராட் கோலி கண் கலங்கினார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 12, 2022, 04:54 PM IST
  • கண் கலங்கிய விராட் கோலி
  • மூன்று முறை கோலி டக் அவுட்
  • பேட்டியில் விராட் கோலி கண் கலங்கினார்
மூன்று முறை டக் அவுட்... பேட்டியில் கண் கலங்கிய விராட் கோலி title=

ஐபிஎல் 2022ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நான்காவது இடத்தில் இருக்கிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு விஷயம் மட்டுமே குறையாக இருக்கிறது. அது விராட் கோலியின் ஃபார்ம்.

900 ரன்களுக்கும் மேல் ஐபிஎல்லில் அடித்த ஒருவர் இந்த சீசனில் கடுமையான ஃபார்ம் அவுட்டில் இருப்பதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக மூன்று முறை கோலி டக் அவுட் ஆனதை பெரும் இடியாகவே இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் விராட் கோலி அளித்த பேட்டி ஒன்றில், உங்கள் வீட்டில் விலங்குகள் எதுவும் வளர்க்கிறீர்களா என்று நெறியாளர் கேட்டார். அதற்கு பதிலளிக்க கோலி தயார் ஆகையில், உங்களுக்கு சமீபத்தில் 2 டக்குகள் கிடைத்ததே என கோலி டக் அவுட் ஆனதை கிண்டலாக குறிப்பிட்டார்.

Virat

இருப்பினும் அதற்கு சிரித்தபடி பதிலளித்த கோலி,  “நான் 2 முறை முதல் பந்தில் டக் அவுட் ஆனேன். இரண்டாவது முறை அவுட் ஆன பிறகு, உதவியில்லாமல் கைவிடப்பட்டதுபோல தவித்தேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோன்று நடந்ததே இல்லை. அதனால்தான் நான் சிரித்தேன். 

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டி மூலம் ரஷித்கானை தேடி வந்த கவுரவம்

நான் இப்போது அனைத்தையும் பார்த்துவிட்டேன். நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடி வரும் நான், இந்த விளையாட்டு எனக்கு காட்டிய ஏற்றம், இறக்கம் என அனைத்தையும் பார்த்துவிட்டேன்’ என உருக்கமாக கண்கலங்கியபடி கூறினார்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2022 - ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News