உலக கோப்பை 2023: கூட்டமே வரல இலவச டிக்கெட் கொடுங்கப்பா - கலாய்த்த சேவாக்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை 2023-ன் முதல் லீக் போட்டியில் ரசிகர்களே வராததால் இலவச டிக்கெட்டாவது கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கலாய்த்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 5, 2023, 09:00 PM IST
  • உலக கோப்பை முதல் ஆட்டம்
  • ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடியது
  • இலவச டிக்கெட் கொடுக்க சேவாக் வலியுறுத்தல்
உலக கோப்பை 2023: கூட்டமே வரல இலவச டிக்கெட் கொடுங்கப்பா - கலாய்த்த சேவாக் title=

உலக கோப்பை தொடக்கம்

உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இம்முறை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருக்கிறது பிசிசிஐ. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | நியூசிலாந்து vs இங்கிலாந்து: உலகக் கோப்பை 2023 முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு

வெறிச்சோடிய மைதானம்

ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்துக்கு வரவில்லை. சுமார் ஒரு லட்சம் பேர் நேரில் கண்டுகளிக்கக்கூடிய வசதி உடைய அந்த மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆட்டத்தை பார்க்க சில நூறு ரசிகர்களே வந்திருந்தனர். இதனால் மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. கோலாகலமாக உலக கோப்பை தொடங்கும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு பிரம்மாண்ட தொடக்க விழா ஏதும் இல்லாததால் உலக கோப்பை முதல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், வார நாட்களில் உலக கோப்பை தொடங்கியதும் ரசிகர்கள் வராமைக்கு ஒரு முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.

வீரேந்திர சேவாக் கலாய்

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், அகமதாபாத் மைதானம் வெறிச்சோடி இருப்பதை டிவிட்டரில் கலாய்த்துள்ளார். இது தொடர்பாக அவர் இட்டிருக்கும் பதிவில், போட்டியை பார்க்க இலவச டிக்கெட்டுகளையாவது கொடுக்க வேண்டும் என வஞ்சப் புகழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். மதிய நேரத்தில் போட்டி தொடங்குவதால், மாலை நேரம் ஆபீஸ் முடித்துவிட்டு ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க வருவார்கள் என எண்ணுகிறேன். இந்திய அணி விளையாடாத போட்டிகளுக்கு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிக்கெட் கொடுத்து உலக கோப்பையை நேரில் பார்க்க அனுமதிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் கோரிக்கையும் விடுத்திருக்கிறார். 

நெட்டிசன்கள் விமர்சனம்

உலக கோப்பை போட்டிக்கு ரசிகர்கள் வராததற்கு பிசிசிஐ காரணம் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். டிக்கெட் விற்பனையில் குளறுபடி மற்றும் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை ஆகியவையே ரசிகர்கள் நேரடியாக மைதானத்துக்கு வந்து போட்டியை பார்க்க ஆர்வம் காட்டாததற்கு முக்கிய காரணம் என்றும் விமர்சித்துள்ளனர். பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | ஐசிசி உலகக் கோப்பை 2023: டிக்கெட்டுகளை BookMyShow-ல் புக் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News