நியூசிலாந்து vs இங்கிலாந்து: உலகக் கோப்பை 2023 முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு

England vs New Zealand Score Updates: உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளதால், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 5, 2023, 02:16 PM IST
நியூசிலாந்து vs இங்கிலாந்து: உலகக் கோப்பை 2023 முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு title=

World Cup 2023, England vs New Zealand: 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இன்று தொடங்குகிறது. 46 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் ஆட்டம் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1:30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

கடைசியாக 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் முடிவில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தால், சூப்பர் ஓவரை நோக்கி ஆட்டம் நகர்ந்தது. அங்கையும் ஆட்டம் சமநிலையில் முடிந்ததால், பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு சாம்பியன் பட்டம் கொடுக்கப்பட்டது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இவ்வாறான நிலையில் கிவி அணிக்கு 2019ல் ஏற்பட்ட தோல்வியின் கணக்கை சமன் செய்ய இது நல்ல வாய்ப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். ரசிகர்களின் எண்ணத்தை நியூசிலாந்து வீரர்கள் நிறைவேற்றுவார்களா என்பது பொறுத்திருந்தது பார்ப்போம்.

இந்தக் கட்டுரையில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளின் நேருக்கு நேர் மோதிய போட்டிகள் விவரம், உலகக் கோப்பைப் போட்டிகளின் முடிவுகள், பிட்ச் நிலவரம், வானிலை நிலைமைகள் குறித்து பார்ப்போம்.

மேலும் படிக்க - இங்கிலாந்து - நியூசிலாந்து: 4 வருஷ பகை... உலக கோப்பை ஏமாற்றத்துக்கு பதிலடி கொடுக்குமா கருப்பு படை!

நேருக்கு நேர் போட்டி: இரு அணிகளும் சமநிலையில் வெற்றி

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 95 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இருவரும் 44-44 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர். 3 போட்டிகள் சமநிலையில் இருந்த நிலையில், 4 போட்டிகள் முடிவடையவில்லை.

உலகக் கோப்பையில் இருவரும் இரு அணிகளும் சமமான வெற்றி

உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 10 போட்டிகள் நடந்துள்ளன. இரு அணிகளும் 5-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளன. 2019 உலகக் கோப்பையில் இருவருக்கும் இடையேயான கடைசிப் போட்டி டை ஆனது. விஷயம் சூப்பர் ஓவரை எட்டியது, ஆனால் அது டையான பிறகு, அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டி நிலவரம்

இங்கிலாந்து கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி சமீபத்தில் நியூசிலாந்தை அதன் சொந்த மைதானத்தில் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தோற்கடித்தது. அதேபோல இந்த ஆண்டு விளையாடிய 12 ஒருநாள் போட்டிகளில் 7ல் இங்கிலாந்து வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை. அதேசமயம் அந்த அணி நான்கு போட்டிகளில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.

மேலும் படிக்க - ஐசிசி உலகக் கோப்பை 2023: டிக்கெட்டுகளை BookMyShow-ல் புக் செய்வது எப்படி?

நியூசிலாந்து கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டி நிலவரம்

நியூசிலாந்து கடைசியாக 5 ஒருநாள் போட்டிகளில் 2ல் மட்டுமே வென்றது, 3ல் தோல்வியடைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழப்பதற்கு முன்பு, பாகிஸ்தானிலும் தோல்வியடைந்தது.

வானிலை அறிக்கை: வெயில் இருக்கும், மழைக்கு வாய்ப்பில்லை

உலகக் கோப்பை 2023  தொடக்க ஆட்டத்தின் நாளான இன்று (வியாழக்கிழமை) அகமதாபாத்தில் வானிலை தெளிவாக இருக்கும். இங்கு வெயில் சற்று அதிகமாக இருக்கும். மழை பெய்ய வாய்ப்பில்லை.

பிட்ச் அறிக்கை: மாலை நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி

இந்த மைதானத்தை பொறுத்த வரை டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ய விரும்புகிறது. ஏனெனில் மாலை நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு போட்டியிலும், பின்னர் பேட்டிங் செய்த அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் படிக்க - இந்த உலகக் கோப்பையில் கலக்கப்போவது யாரு...? - கவனிக்க வேண்டிய 10 முக்கிய வீரர்கள்!

இரு அணிகளும் விளையாடும் வீரர்களின் விவரம்:

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்

நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், மாட் ஹென்றி, டிரென்ட் போல்ட்

மேலும் படிக்க - உலக கோப்பை 2023: இந்திய அணி ஓப்பனிங் மேட்சில் ஆடாதது ஏன்? பின்னணி இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News