புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் தகுதி வரிசை குறித்து மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் தேர்வு தொடர்பாக ரோஹன் போபண்ணா மற்றும் சானியா மிர்சாவின் கண்டனங்களுக்கு இந்திய டென்னிஸ் அமைப்பு AITA காரசாரமாக பதிலளித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் அருமையான வாய்ப்பை தவறவிட்டு விட்டதாக டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறந்த டென்னிஸ் நட்சத்திரங்களான சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபன்னா ஆகியோர் அகில இந்திய டென்னிஸ் அசோசியேஷன் (All India Tennis Association (AITA)) தொடர்பாக கூறிய காருத்துக்கள் வைரலாகின்றன. 'வீரர்கள், அரசு, ஊடகங்கள் மற்றும் அனைவரையும் தவறாக வழிநடத்தியது AITA என்றும், இன்னும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க ஒரு கடைசி வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
Whaaattt???If this is true then it's absolutely ridiculous and shameful..by this it also means that we have sacrificed a very good shot at a medal in the mixed doubles if you and I would have played as planned. We were both told that you and sumit's names hav been given .. https://t.co/h3fGkK0im8
— Sania Mirza (@MirzaSania) July 19, 2021
ஒலிம்பிக் போட்டிகளில் டென்னிஸ் வீரர் பங்கேற்பது குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை என்று டென்னிஸ் நிர்வாகக் குழுவை சானியா மிர்சா கடுமையாக சாடியுள்ளார்.
டோக்கியோவில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர், மீண்டும் ஒரு ‘தேர்வு சர்ச்சை’ எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் தனது விரக்தியை வெளிப்படுத்த போபண்ணா ட்விட்டரில் AITA பற்றி கருத்து கூறியபோது பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (International Tennis Federation) தன்னுடைய நுழைவு, மற்றும் சுமித் நாகலில்ன் நுழைவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், நியமன காலக்கெடுவுக்குப் பிறகு எந்த மாற்றங்களும் அனுமதிக்கப்படாது, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு காயம் அல்லது நோய் ஏற்பட்டால் மட்டுமே மாற்றம் ஏற்கப்படும் என்று சொல்லிவிட்டதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
"சுமித் நாகல் மற்றும் எனக்கான ஒரு பதிவை ஐ.டி.எஃப் ஒருபோதும் ஏற்கவில்லை. காயம் / நோய் இல்லாவிட்டால் நியமன காலக்கெடுவுக்குப் பிறகு (ஜூன் 22) எந்த மாற்றங்களும் அனுமதிக்கப்படாது என்பதில் ஐ.டி.எஃப் தெளிவாக இருந்தது. எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாகக் கூறி AITA , விளையாட்டு வீரர்கள், அரசு, ஊடகங்கள் மற்றும் அனைவரையும் தவறாக வழிநடத்தியுள்ளது, ”என்று போபண்ணா தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
ITF has never accepted an entry for Sumit Nagal & myself.
ITF was clear that no changes were allowed after the nomination deadline (22nd June) unless Injury/Illness.
AITA has mislead the players,government, media and everyone else by stating we still have a chance. @AnurajR1— Rohan Bopanna (@rohanbopanna) July 19, 2021
போபண்ணாவின் ட்வீட்டிற்கு ஆதரவு தெரிவித்த சானியா மிர்சா, AITA இன் தவறான வழிநடத்துதல் "அபத்தமானது மற்றும் வெட்கக்கேடானது" என்று சொன்னார். இந்த சிக்கலால் டென்னிஸில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது என்றும் வருத்தப்பட்டார்.
இதற்கு பதிலளித்த AITA பொதுச்செயலாளர் அனில் துப்பர், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதி குறித்து தெளிவுபடுத்தினார், அதிகபட்ச வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதை உறுதிசெய்ய கூட்டமைப்பு தனது சிறந்த முயற்சியைச் செய்துள்ளது என்றார்.
"இந்திய ஆண்களின் இரட்டையர் போட்டியில் நுழைவை உறுதி செய்ய அசாதாரண முயற்சிகளை எடுத்துள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, திவிஜ் (Divij) மற்றும் ரோஹனின் நுழைவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை, காத்திருப்போர் பட்டியலில் இருந்தன, திடீரென்று சுமித்துக்கு ஒற்றையர் போட்டியில் விளையாட நுழைவு கிடைத்தது. அவர் பங்கேற்கிறாரா என்பதை உறுதி செய்ய சுமித்தை தொடர்பு கொண்டோம். அவர் விளையாடுவார் என்று நாங்கள் ஏற்கனவே ஐ.டி.எஃப்-க்கு உறுதி செய்துவிட்டோம்” என்று துபார் ANI இடம் தெரிவித்தார்.
Also Read | 'Anti-sex' beds: டோக்கியோ ஒலிம்பிக்கில் 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள்!
"அனைத்து சம்பிரதாயங்களும் ஜூன் 17 அன்று தொடங்கியது, மேலும் சுமித் ஒற்றை வீரராக இருந்தால் இரட்டையர் கூட்டாளரைப் பெறவும் உரிமை உண்டு என்பதை நாங்கள் எழுதினோம். அதனால்தான் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான ரோஹன்-திவிஜ் இணையை ரோஹன் மற்றும் சுமித் என்று நாங்கள் மாற்றினோம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐ.டி.எஃப் உட்பட அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. இதையெல்லாம் அவர் ஏன் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் மிகவும் திறமையானவராக இருந்தால், நேரடியாக பங்கேற்கவேண்டியது தானே? ஏன் மற்றொருவர் போட்டியில் இருந்து விலகுவார் என்று காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர், சொந்தமாக ஒலிம்பிக்கில் நுழைய வேண்டும், நீங்கள் ஏன் மற்றவர் திரும்பப் பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்று துபார் காட்டமாக பதிலளித்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், திரும்பப் பெறுவதன் அடிப்படையில் நாகல் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். 23 வயதான இவர் தற்போது ஏடிபி தரவரிசையில் 154 வது இடத்தில் உள்ளார். CZE சேலஞ்சர் கியூஎஃப், ப்ராக் சென்றடைந்த பின்னர், ஆகஸ்ட் 24, 2020 அன்று அவர் முதல் முறையாக 122வது இடத்தை அடைந்தார்.
Also Read | IND vs SL: மரியாதை தெரிந்த க்ருணால் பாண்ட்யா என புகழாரம்
ஜூலை மாதம் ஒலிம்பிக்கில் விளையாடுபவர்களின் பெயர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஒலிம்பிக்கில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் அங்கிதா ரெய்னா ஆகியோர் இந்தியாவின் சார்பில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டது.
ஜூலை 23ஆம் தேதியன்று தொடங்கவுள்ள டோக்கியோ 2020 இல் கலந்துக் கொள்ளும் சானியா மிர்சா, நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் விளையாடிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். அங்கிதா ரெய்னா தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுகிறார்.
Also Read | Tokyo Olympics: விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR