IND vs SL: மரியாதை தெரிந்த க்ருணால் பாண்ட்யா என புகழாரம்

கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக இலங்கைக்கு இந்திய அணி சென்றுள்ளது. அங்கு  3 ஒருநாள் மற்றும்  3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 19, 2021, 08:30 PM IST
IND vs SL: மரியாதை தெரிந்த க்ருணால் பாண்ட்யா என புகழாரம் title=

கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக இலங்கைக்கு இந்திய அணி சென்றுள்ளது. அங்கு  3 ஒருநாள் மற்றும்  3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடும். 

அதில் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.  

நேற்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. அப்போது ஆட்டத்தின் 22-வது ஓவரை க்ருணால் பாண்ட்யா வீச, அதை எதிர்கொண்ட தனஞ்சய டி சில்வா, நேராக பந்தை அடித்தார். பறந்து வந்த பந்தை பிடிக்க க்ருணால் பாண்ட்யா டைவ் அடித்தார். 

அப்போது நான் ஸ்டைக்கர் என்டில் இருந்த இலங்கை வீரர் சரித் அசலங்காவின் மேல் மோதுவதுபோல் சென்ற க்ருணால் பாண்ட்யா, சுதாரித்துவிட்டார். பிறகு, அவர் அசலங்காவை மரியாதை நிமித்தம் கட்டியணைத்தார்.

இதை காட்டும் 20 நொடிகள் மட்டுமே கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. பொதுவாக மைதானத்தில்  சீற்றத்துடன் காணப்படும் க்ருணால் பாண்ட்யா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் விளையாடுவதாலேயே பண்பாக நடந்துகொள்வதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக, விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.  ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட மற்றொரு அணி இலங்கைக்கு சென்றுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை 262 ரன்களை எடுத்தது.

36.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்களை எடுத்த  இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Also Read | MS Dhoni-யால் இந்த 5 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News