2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருது; ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்: முழு விவரம்

ஐசிசி-யின் 2018 ஆம் ஆண்டுக்கான விருதை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். விருது பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 22, 2019, 04:03 PM IST
2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருது; ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்: முழு விவரம் title=

ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை கொண்ட கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 2018-ஆம் ஆண்டிற்கான ஐசிசி கனவு அணி, சிறந்த கேப்டன், சிறந்த வீரார்களின் பெயர் மற்றும் வீரர்களுக்கான விருது போன்றவற்றை இன்று (செவ்வாய்) ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான விருதுகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விருதுகளில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். 

ஐசிசி ஒருநாள் போட்டியின் கனவு அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகிய நான்கு இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலி நியமித்து உள்ளனர். அதேபோல டெஸ்ட் போட்டியின் கனவு அணியில் விராட் கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அணிக்கும் கேப்டனாக விராட் கோலியை நியமித்துள்ளனர். அதேவேளையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என இரண்டு கனவு அணியில் இடம் பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், 2018 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆட்டகாரர், 2018 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் ஆட்டகாரர் என்னும் பெருமையினையும் கோலி பெற்றுள்ளார். ஒரே வருடத்தில் மூன்று விதமான விருதை பெரும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

ஐசிசி-யின் 2018 ஆம் ஆண்டின் சிறந்த இளம் வீர்ர் விருது (Emerging Player of the Year) இந்திய வீரர் ரிசப்பந்த்-க்கு கிடைத்துள்ளது. இந்த விருதை பெரும் மூன்றாவது இந்திய ஆவார். சர்வதேச அளவில் இதுவரை 15 வீரர்கள் இந்த விருது பெற்றுள்ளனர். 

ஐசிசி-யின் 2018 ஆம் ஆண்டின் சிறந்த நடுவர் விருதை இலங்கையை சேர்ந்த குமார் தர்மசேனா பெற்றுள்ளார். இந்த விருதை இவர் இரண்டாவது முறையாக பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டின் ஐசிசி-யின் அசோசியேட்டட் பிளேயர் விருதை ஸ்காட்லாந்து வீரர் கலும் மெக்லியோட் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டு சதம் அடித்து அணிக்கு மறக்கமுடியாத வெற்றியை பெற்று தந்தார்.

2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனுக்கு கொடுக்கப்பட்டது. ஒரு விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதற்க்கான உதாரணம் கேன் வில்லியம்சன் என ஐசிசி புகழாரம் சூட்டியுள்ளது.

Trending News