மிதாலி ராஜ் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? அவருடைய முதல் காதல்..!

உலகளவில் பிரபலமான இந்திய கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜூக்கு 39 வயதாகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 20, 2022, 06:01 PM IST
  • மிதாலி ராஜ் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?
  • தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மிதாலி
  • திருமண ஆசை ஒரு காலத்தில் இருந்தது
மிதாலி ராஜ் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? அவருடைய முதல் காதல்..! title=

இந்திய மகளிர் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர். அவர் பெயரில் பல சாதனைகள் உள்ளன, அவர் இந்திய 'மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர்' என்று அழைக்கப்படுகிறார். சமீபத்தில், அவர் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் விருப்பமில்லை

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜ், தனித்துவமான கிரிக்கெட் விளையாட்டினால் உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். ஆனால், அவருக்கு முதலில் கிரிக்கெட் விளையாடுவதில் விருப்பமில்லை. தந்தையின் வற்புறுத்தலின்பேரில் கிரிக்கெட் வீராங்கனையானார். அவரின் விருப்பம் நடனம். ஆனால், தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் கிரிக்கெட் வீரர்கள் என்பதால் கிரிக்கெட் விளையாடுவது இயல்பாகிவிட்டது. நடனம் தான் அவருக்கு பிடித்த ஒன்று.

மேலும் படிக்க | தோனி - கம்பீருக்கு இடையே என்ன பிரச்சனை? பல ஆண்டுகளுக்குப் பின் வெளியான ரகசியம்

திருமணம் செய்யாததற்கு காரணம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1982ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பிறந்த மிதாலி ராஜ் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவ்வளவு வயசானாலும் கல்யாணம் ஆகாததுக்குக் காரணமும் ரொம்ப விசேஷம். இந்த ரகசியத்தை மிதாலி 'மிட் டே'க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். “ ரொம்ப நாளைக்கு முன்பு  சின்ன வயசுல கல்யாண எண்ணம் வந்தது, இப்போது கல்யாணம் ஆனவர்களை பார்த்தாலே இந்த எண்ணம் வருவதில்லை. நான் தனிமையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mithali Raj (@mithaliraj)

ஒருநாள் கிரிக்கெட் சாதனை

மிதாலி ராஜ் 1999 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் சர்வதேச வீராங்கனையாக அறிமுகமானார். அதன்பிறகு சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்கத் தொடங்கினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் பெண் வீராங்கனை இவர். ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்கள் அடித்துள்ளார். அதே சமயம் டி20 கிரிக்கெட்டில் 2364 ரன்கள் குவித்துள்ளனர். தனது சிறப்பான பேட்டிங் திறமையால் இந்திய பெண்கள் அணியை பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க | ரிஷப் பந்தால் ஓய்வு பெறப்போகும் இந்திய வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News