மட்டை பிடித்த கையில் வாளை எடுத்து சுழற்றிய சுழற்பந்து வீச்சாளர்... வீடியோ Viral

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த வீடியோ ஒன்று ஒருபுறம் பாராட்டை பெற்றாலும், மறுபுறம் விவாதத்துக்கும் உள்ளாகி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 14, 2020, 12:14 AM IST
மட்டை பிடித்த கையில் வாளை எடுத்து சுழற்றிய சுழற்பந்து வீச்சாளர்... வீடியோ Viral title=

புதுடில்லி: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், எல்லோரும் புதிதாக ஏதாவது செய்ய முயற்சித்து, அதன் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றன. அதில் சில வீடியோக்கள் அதிகம் வைரலாகும். அதேநேரத்தில் சில வீடியோக்கள் சர்ச்சையையும் ஏற்படுத்தும். அப்படி தான் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த வீடியோ ஒன்று ஒருபுறம் பாராட்டை பெற்றாலும், மறுபுறம் விவாதத்துக்கும் உள்ளாகி உள்ளது.

வீடியோ பகிர்ந்த அவர்,  “ஒரு வாள் தன்னுடைய பிரகாசத்தை இழக்கலாம். ஆனால், தன் மாஸ்டரை மதிக்காமல் போகாது எனக்கூறி #Rajputboy என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தி உள்ளார். இதை அவர் வேடிக்கையாக பகிர்ந்தாலும், அதற்கு பலர் பல விதமான பதில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன. 

இந்த 17-வினாடி வீடியோவில், ஜடேஜா வாள்வீச்சைக் காட்டினார. ரவீந்திர ஜடேஜாவின் திறமையை பலர் பாராட்டியிருந்தாலும், சிலர் அதை விமர்சித்துள்ளனர். எப்படியிருந்தாலும், விமர்சனம் தானாகவே புகழுடன் வருகிறது.

அவரின் வீடியோ: 

 

 

Trending News