ஐபிஎல் 2025ல் விளையாடுவேனா? சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தோனி சொன்ன பதில்!

Dhoni: ஐபிஎல் மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள அணியில் ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31ம் தேதிக்குள் வீரர்கள் தக்க வைப்பு தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Oct 24, 2024, 10:41 AM IST
  • ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா?
  • அக்டோபர் 31ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
  • சிஎஸ்கே நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
ஐபிஎல் 2025ல் விளையாடுவேனா? சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தோனி சொன்ன பதில்! title=

பிசிசிஐ அன்கேப்ட் விதிகளை மீண்டும் கொண்டு வந்ததன் மூலம் 5 வருடம் இந்திய அணிக்காக விளையாடாத வீரர்களை குறைந்த பணத்தில் ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும். இதன் மூலம் தோனியை சிஎஸ்கே அணி ரூ. 4 கோடிக்கு தக்க வைத்து கொள்ள முடியும். தற்போது ஐபிஎல் 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், அனைவரது பார்வையும் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீது திரும்பி உள்ளது. தற்போது 43 வயதாகும் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா மாட்டாரா என்பதை பற்றி இன்னும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தெரிவிக்கவில்லை. தோனி தலைமையில் சிஎஸ்கே இதுவரை 5 பட்டங்களை வென்றுள்ளது. ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்பு தோனி அவரது கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாடுக்கு விட்டுக்கொடுத்தார். ஆரம்ப போட்டிளில் வெற்றியை பெற்றாலும் பின்னர் தொடர் தோல்விகளை சென்னை அணி சந்தித்தது. பிளேஆஃப் வாய்ப்பை தவறவிட்டாலும் ஐந்தாவது இடத்தை பிடித்தது.

மேலும் படிக்க | IND vs NZ: 2வது டெஸ்டில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!

ஐபிஎல் 2023 முதல் தோனி கடைசி சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து வருகிறார். ஐபிஎல் 2024ல் தோனி 14 போட்டிகளில் விளையாடி 73 சராசரியில் 161 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 13 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் அடங்கும். இது அவரது பேட்டிங் திறனை எடுத்து காட்டுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் தொடர்பான புதிய விதிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒவ்வொரு அணிக்கும் ரூ.120 கோடிக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். அக்டோபர் 31ம் தேதிக்கு முன்பு தோனி சிஎஸ்கே நிர்வாகத்திடம் விளையாடுவது பற்றி பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. CSK CEO விஸ்வநாதன், ஐபிஎல் 2024ல் தோனி விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தோனி தான் சிஎஸ்கேவின் அடையாளம் என்றும், அவரின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 28 ஆம் தேதி வரை எந்த ஒரு மீட்டிங்கிற்கும் நான் இருக்க மாட்டேன் என்று சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே அதன் பிறகு தான் முடிவு எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் அதிகபட்சம் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். தோனி கடைசியாக 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை அரையிறுதியில் விளையாடினார். பிறகு 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். தற்போது தோனி ஐபிஎல் தவிர வேறு எந்த போட்டியிலும் விளையாடுவதில்லை.

மேலும் படிக்க | IND vs NZ: ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு? - வெளியேறப்போவது யார்...? ட்விஸ்ட் வைக்கும் கம்பீர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News