இந்திய மகளிர் அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு- வீடியோ

Last Updated : Jul 26, 2017, 04:07 PM IST
இந்திய மகளிர் அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு- வீடியோ title=

மகளிர் உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. மும்பை விமான நிலையம் வந்தடைந்த வீராங்கனைகளுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மகளிர் உலக கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் போராடி தோல்வி அடைந்தது.

இந்திய மகளிர் அணி தோற்றாலும் வெற்றி பெற்றது போல வாழ்த்துகள் குவிந்தன. இந்தியப் பிரதமர், பல அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் இவர்களை கொண்டாடினார்கள். இதன்மூலம் இந்திய மகளிர் அணிக்கும் மிகப் பெரிய வெளிச்சம் கிடைத்துள்ளது. 

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய மகளிர் அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. ரசிகர்கள் பெருமளவில் மும்பை விமான நிலையம் முன் கூடி, அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். லண்டனிலிருந்து புறப்படும் முன்பு, அங்குள்ள இந்திய இல்லத்தில் இந்திய மகளிர் அணியை அழைத்து கௌரவித்தனர்.

அவர்களின் உற்சாக வரவேற்பு வீடியோ- பார்க்க

 

 

Trending News