அரையிறுதி: D/L method விதிப்படி இந்தியாவின் இலக்கு என்னவாக இருக்கும்?

ஒருவேளை டக்வொர்த் லூயிஸ் (D/ L method) விதிப்படி போட்டி நடத்தப்பட்டால், இந்தியாவுக்கு எப்படி இலக்கு நிர்ணியக்கப்படும் பார்ப்போம்...!!,

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 10, 2019, 01:13 PM IST
அரையிறுதி: D/L method விதிப்படி இந்தியாவின் இலக்கு என்னவாக இருக்கும்? title=

மான்செஸ்டர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைப்பெற்று வரும் முதல் அரையிறுதி போட்டி மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று தடைப்பட்ட இடத்தில் இருந்து தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கிய, இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

ஆரம்பம் முதலே இந்தியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தினறிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க துவங்கியது. ஆட்டத்தின் 46.1 ஓவர்கள் வரையில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அந்த சமயத்தில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், மைதானத்தில் ஏற்ப்பட்ட ஈரப்பதம் காரணமாக பந்து சரியாக வீச முடியாது காரணத்தால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

இன்று மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மாலை 3 மணிக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இன்றும் மழை பெய்தால், அதனால் ஆட்டம் கைவிடப்பட்டால், இந்தியா நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும். 

ஒருவேளை டக்வொர்த் லூயிஸ் (D/ L method) விதிப்படி போட்டி நடத்தப்பட்டால், இந்தியாவுக்கு எப்படி இலக்கு நிர்ணியக்கப்படும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். 

* 20 ஓவரில் 7.4 சராசரி அடிப்படையில் 148 ரன்கள் எடுக்க வேண்டும்.

* 25 ஓவரில் 6.9 சராசரி அடிப்படையில் 172 ரன்கள் எடுக்க வேண்டும்.

* 30 ஓவரில் 6.4 சராசரி அடிப்படையில் 192 ரன்கள் எடுக்க வேண்டும்.

* 35 ஓவரில் 6 சராசரி அடிப்படையில் 209 ரன்கள் எடுக்க வேண்டும்.

* 40 ஓவரில் 5.6 சராசரி அடிப்படையில் 223 ரன்கள் எடுக்க வேண்டும்.

* 46 ஓவரில் 5.2 சராசரி அடிப்படையில் 237 ரன்கள் எடுக்க வேண்டும்.

டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பார்த்தால் இந்தியாவுக்கு அதக ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டால், ரன்-விகிதம் குறையும். இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும்.

Trending News