WTC Final, Ind vs NZ: இங்கிலாந்தில் இந்தியா நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி துவங்கி விட்டது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட WTC இறுதிப் போட்டியின் (WTC Final) முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக நடக்காமல் போனது. இன்றும் லேசான மழைக்கான கணிப்புகள் இருந்தன.
முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது. துவக்க ஆட்டக்காரர்களாக வந்த ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் நிதானமாக ஆடத் துவங்கினர். 20.1 ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 62 ஆக இருந்தபோது ரோஹித் ஷர்மா 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 24.3 ஓவர்களில் ஷுப்மன் கில்லும் 28 ரன்களை எடுத்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் புஜாராவும் நிதானமாக ஆடத் தொடங்கினர். 40.4 ஓவரில் புஜாராவும் ஆட்டமிழக்க, ரஹானே பேட்டிங் செய்ய வந்தார். 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 146 ரன்களை எடுத்துள்ள நிலையில் மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டது. விராட் கோலி (Virat Kohli) 44 ரன்களுடனும், அஜிங்க்ய ரஹானே 29 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
Bad light plays spoilsport again as the players walk off the field
are 134/3. #WTC21 Final | #INDvNZ | https://t.co/4vtSUy3HZ7 pic.twitter.com/gfJ1JeT2WC
— ICC (@ICC) June 19, 2021
ALSO READ: WTC Final: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு
இதற்கிடையில், இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் கருத்து தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியில் பந்து வீச்சாளர்களின் தேர்வு குறித்து அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஷேன் வார்ன் கோபம் அடைந்தார்
ஷேன் வார்ன் கடுமையான தொனியில், "ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி எந்த சுழற்பந்து வீச்சாளருக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை என்பதைக் கண்டு நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன். பிட்சில் கால்தடங்கள் ஏற்கனவே அதிகமாகிவிட்டதால் இந்த விக்கெட்டில் ஸ்பின் மிக அதிகமாக இருக்கும். விக்கெட் சுழன்றால், இந்திய அணி 275 அல்லது 300 ரன்களுக்கு மேல் அடிக்கும். வானிலை தலையிடாமல் இருந்தால், என்னைப் பொறுத்தவரை இப்போதே போட்டி முடிந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
Very disappointed in Nz not playing a spinner in the #ICCWorldTestChampionship as this wicket is going to spin big with huge foot marks developing already. Remember if it seems it will spin. India make anything more than 275/300 ! The match is over unless weather comes in !
— Shane Warne (@ShaneWarne) June 19, 2021
இந்திய அணியில் 2 சுழற்பந்து வீச்சாளர்கள்
நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிவி அணி இந்தியாவுக்கு எதிராக வேகப்பந்துவீச்சையே ஆயுதமாக பயன்படுத்த முடிவெடுத்தது. இந்திய அணியில் (Team India) சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: இந்த 3 New Zealand வீரர்கள் WTC இறுதிப் போட்டியில் இந்தியாவை அச்சுறுத்தலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR