கேஜிஎப் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தென்னிந்தியாவின் ஆக்ஷன் கிங்காக மாறியுள்ளார் யாஷ். அவரின் கேஜிஎப் 2 ஆம் பாகம் விரைவில் திரைக்கு வர உள்ளது. டிரெய்லர் வெளியாகி பெரும் ஆவலை ஏற்படுத்தியிருப்பதால் இந்திய அளவில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் கேஜிஎப் 2 ரிலீஸாக இருப்பதால், புரோமோஷன் பணிகளில் இந்தியா முழுவதும் பிஸியாக பங்கேற்று வருகிறார் யாஷ். அண்மையில் சென்னையில் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட யாஷிடம், பீஸ்ட் படம் வெளியாவது குறித்து கேட்கப்பட்டது. ஏப்ரல் 13 ஆம் தேதி பீஸ்ட் வெளியாவதால், வசூலில் பாதிப்பு ஏற்படுமா? என்றும், பீஸ்ட் vs கேஜிஎப் 2 என்ற சூழல் இருக்கிறதே எனவும் கேட்கப்பட்டது.
மேலும் படிக்க | ’அரசியல் தலைவர்களை விமர்சிக்கக்கூடாது’ - விஜய் அறிக்கையின் பின்னணி
அதற்கு பதில் அளித்த யாஷ், இது அரசியல் அல்ல, இது சினிமா. இரண்டு படங்களையும் ரசிகர்கள் பார்த்து கொண்டாட வேண்டும். நான் விஜய் சாரை மிகவும் மதிக்கிறேன் எனத் தெரிவித்தார். அவரின் இந்தப் பதில் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து மும்பை உள்ளிட்ட இடங்களில் கேஜிஎப் 2 இந்தி புரோமோஷனில் கலந்து கொண்ட யாஷிடம், பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் ஷாரூக்கானுடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு பதிலளித்த யாஷ், நான் சினிமாவில் சின்ன பையன். அவர்கள் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்த தூண்கள். அவர்களுடன் என்னை ஒப்பிடுவது என்பது சரியாக இருக்காது. மேலும், இந்த புகழ் வெளிச்சம் எல்லாம் கொஞ்ச நாள் மட்டுமே என்பதை நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன் எனத் தெரிவித்தார். மேலும், ஒரு பான் இந்தியா படமாக உருவாக்க நினைத்தோம். கேஜிஎப் 2 நன்றாக வந்திருக்கிறது எனவும் யாஷ் கூறினார். மொழிவாரியாக படங்களைப் பிரிக்காமல் இந்திய படங்கள் என அனைத்து படங்களையும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க | அதிக தியேட்டரில் ரிலீசாகும் முதல் படம்: ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கும் பீஸ்ட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR