Pensioners Latest News: அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓய்வூதியதரர்களுக்கான பல முக்கியமான புதுப்பித்தல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அவற்றின் ஒரு முக்கியமான அப்டேட் பற்றி இங்கே காணலாம்.
Pension and Gratuity
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் (DoP&PW) புதிய அலுவலக குறிப்பாணையின்படி, 2021 ஆம் ஆண்டு மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகளின் கீழ் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைக்கான தகுதிச் சேவை தொடர்பான முக்கிய விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஓய்வூதியத் தகுதிக்க்கான சேவைக்காலம்
இந்த விளக்கங்களும், தெளிவூட்டல்களும் முதலில் அக்டோபர் 2022 இல் வெளியிடப்பட்டன. ஓய்வூதியத் தகுதிக்கு பல்வேறு சேவைக் காலங்கள் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் என்பது குறித்து அரசு ஊழியர்கள் (Government Employees) மற்றும் அமைச்சகங்களுக்கு வழிகாட்டுவதற்காக இவை வெளியிடப்பட்டன. இப்போது இவை மீண்டும் மீண்டும் மறுசுழற்சி அதாவது ரீ-சர்குலேட் செய்யப்பட்டுள்ளன.
அலுவலக குறிப்பாணை:
- அலுவலக குறிப்பாணை குறிப்பாக CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் கீழ் உள்ள பல முக்கியமான விதிகளை குறிப்பிடுகிறது.
- இந்த விதிகள் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பலன்களுக்கான பல்வேறு வகையான சேவைகளை கணக்கிடுவதைப் பற்றியவை.
அலுவலக குறிப்பாணையில், பின்வருவன தொடர்பான தெளிவுபடுத்தல்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன:
மாநில அரசு பணிகளில் சேவை (Service in State Governments):
மாநில அரசுப் பணிகளில் பணியாற்றிய சேவை காலம், விதி 13ன் கீழ் ஓய்வூதியத்திற்கான தகுதிச் சேவையாகக் கணக்கிடப்படும்.
தன்னாட்சி அமைப்புகளில் சேவை (Service in Autonomous Bodies):
ஒரு தன்னாட்சி அமைப்பில் (மத்திய அல்லது மாநில அரசாங்கத்தின் கீழ்) பணிபுரிந்த பணியாளர்களும் விதி 14ன் படி இந்தச் சேவையை தங்களின் ஓய்வூதியம் மற்றும் கருணைத் தொகையை பெற கணக்கிடலாம்.ஒப்பந்தத்தில் பணிபுரிந்த சேவைக்காலத்தை விதி 18ன் கீழ் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைக்கான தகுதிச் சேவையாகக் கருதலாம்.
மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் (Re-employed government servants):
ஒரு அரசு ஊழியர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டால், அவரது முந்தைய அரசுப் பணிக் காலத்தை விதி 19ன் கீழ் ஓய்வூதியத்திற்கு கணக்கிடலாம். சிவில் வேலையில் சேரும் முன் செய்யப்பட்ட ராணுவ சேவை விதி 20ன் கீழ் கணக்கிடப்படும்.
விடுப்பு காலங்கள் (Leave periods):
- விதி 24ன் கீழ் பணியாளர்கள் எடுக்கும் விடுப்புக் காலங்களை அவர்களது தகுதிச் சேவையின் ஒரு பகுதியாகக் கணக்கிடலாம்.
- பயிற்சிக்காக செலவிடப்பட்ட நேரத்தையும் விதி 22ன் படி ஓய்வூதியம் மற்றும் கருணைத் தொகைக்காகக் கணக்கிடலாம்.
- விதி 23ன் கீழ், இடைநீக்கம் செய்யப்பட்ட காலம், ஓய்வூதியத்திற்கு எவ்வாறு கணக்கிடப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
- சேவை குறுக்கீடுகள் மற்றும் அவற்றின் தீர்வு பற்றிய விதிகள் விதிகள் 27 மற்றும் 28ன் கீழ் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
சர்வதேச அமைப்புகளுக்கான பிரதிநிதி (Deputation to International Organisations):
ஐக்கிய நாடுகள் சபை அல்லது IMF போன்ற சர்வதேச அமைப்புகளுக்குப் பிரதிநிதியாக பணிபுரிந்த சேவைக்காலங்கள், விதி 29ன் கீழ் ஓய்வூதியத்திற்கான தகுதிச் சேவையாகக் கருதப்படலாம்.
சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அல்லது துறைகளால் தகுதிவாய்ந்த சேவையின் வழக்கமான சரிபார்ப்பின் தேவை விதி 30 இல் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து அமைச்சகங்களையும் துறைகளையும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது ரீ-சர்குலேட் செய்யப்பட்ட தெளிவுபடுத்தல்கள், அனைத்து அரசாங்கத் துறைகளிலும் ஒரே மாதிரியான புரிதல் மற்றும் தகுதிச் சேவை விதிகளை செயல்படுத்துவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கையானது ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி பலன்களுக்கான செயல்முறையை எளிமையாக்க முயல்கிறது, மேலும், CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் அறிவிப்பிற்குப் பிறகு எழுந்த சந்தேகங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முயற்சி செய்யப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ