இந்திய அணியின் முன்னாள் அதிரடி மன்னன் யுவராஜ் சிங்கின் டிவிட்டர் பதிவு பேசுபொருளாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பட்லரை, பேட்டிங்கின்போது குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓவர்டேக் செய்தார். அப்போது பீல்டிங்கில் இருந்த பட்லர், தான் அணிந்திருந்த ஆரஞ்சு கேப்பை உடனடியாக கழற்றிவிட்டார். பட்லரின் இந்த செயல் உடனடியாக கவனிக்கப்பட்டு, பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த செயல் குறித்து யுவராஜ் பதிவு செய்துள்ள டிவிட் தான் அஸ்வினையும் சீண்டியுள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே வீரர் - T20 உலகக்கோப்பையும் கேள்விக்குறி
குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி டி.ஓய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, அபாரமாக விளையாடி 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பட்லர் 24 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முன்னதாக அவர் பீல்டிங் செய்தபோது, சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா ஐபிஎல் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பட்லரை முந்தினார். அப்போது களத்தில் இருந்த பட்லர் உடனடியாக தான் அணிந்திருந்த ஆரஞ்சு கேப்பை கழற்றிவிட்டார்.
பின்னர் பேட்டிங்கின்போது அரைசதம் விளாசி மீண்டும் ஆரஞ்சு கேப்பை தனதாக்கிக் கொண்டார். பட்லரின் இந்த செயல் அவரின் உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை காட்டுவதாக பலரும் புகழ்ந்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் அதிரடி மன்னன் யுவராஜ் சிங்கும், பட்லரை டிவிட்டரில் பாராட்டியுள்ளார். பட்லர் ஜென்டில்மேன் ஆப் கிரிக்கெட் என புகழ்ந்துள்ள யுவராஜ் சிங், இதனை மற்ற வீரர்களும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அவருடைய அணியிலேயே இருக்கும் சக வீரர்கள் இதனைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். சக வீரர்கள் என யுவராஜ் குறிப்பிட்டுள்ளது, அஸ்வினை தான் ரசிகர்கள் கொளுத்தி போட்டுள்ளனர்.
We still have gentleman in the game of cricket !!! @josbuttler other players should learn from him specially team mates !!! #IPL2022 #RRvGT
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 14, 2022
ஏனென்றால், பட்லரை மண்கட் முறையில் அஸ்வின் அவுட்டாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டின் மாண்பை குலைக்கும் வகையில் அஸ்வின் நடத்தை இருந்ததாக அப்போது சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை இன்னும் முற்றுபெறாத நிலையில், அஸ்வின் மற்றும் பட்லர் தற்போது ஒரே அணியில் விளையாடி வருகின்றனர். இந்த சர்ச்சையை குறிப்பிட்டு தான் யுவராஜ் மறைமுகமாக டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR