ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. அதன்படி, இரு அணிகளுக்கிடையேயான முதலாவது போட்டி ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில்லியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதனையடுத்து ஜிம்பாப்வே அணி முதலில் களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கயா மற்றும் மருமானி ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கயா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பொறுமையாக ஆடிய மருமானி 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
முன்யோங்கா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்து அசத்திய சிக்கந்தர் ராசா பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் எடுத்தது.
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் கண்டது. அந்த அணியில் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினர்ர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆரோன் பின்ச் 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
Yes, Greeny! A maiden ODI five-wicket haul for our allrounder against Zimbabwe today. He finished the innings with 5-33 from nine overs #WESTISBEST pic.twitter.com/kVEB0XAOZR
— WACA (@WACA_Cricket) August 28, 2022
அடுத்து வார்னருடன் ஸ்டீவ் ஸ்மித் இணைந்தார். இந்த இணை மிகச்சிறப்பாக ஆடியது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் அரைசதம் அடித்தார். அவர் 57 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்கந்தர் ராசாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வார்னருக்கு அடுத்து வந்த அலெக்ஸ் கேரி (10 ரன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (19 ரன்), மிட்செல் மார்ஷ் (2 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி கொடுத்தனர்.
இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி இறுதியில் ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்தது. ஸ்மித் 48 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 9 பந்துகளில் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேலும் படிக்க | போட்டிக்கு இன்னும் கொஞ்ச நேரம்தான்... கோலிக்கு பாகிஸ்தான் வீரர் ஆதரவு
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 31ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ