சென்னை: துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான (Chennai Iternational Airport) நிலையத்திற்கு வந்த பயணிகளிடமிருந்து ரூ .82.3 லட்சம் மதிப்புள்ள 1.48 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவிட் -19 (COVID-19) நோய்தொற்றுக்கு மத்தியில், சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் (Gold Smuggling) கண்டுபிடிக்கப்பட்ட முதல் வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் (IX-1644) வந்த கலீல் அகமது என்ற 24 வயது நபரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரது உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பாக்கெட் தங்க பேஸ்ட் (Gold Paste) மீட்கப்பட்டது. அதாவது ரூ. 15.60 லட்சம் மதிப்புள்ள 280 கிராம் தங்கம் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
ALSO READ | NIA: கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் கைது
திங்கள்கிழமை இரவு விமான நிலையத்திற்கு வெளியே, விமான புலனாய்வு அதிகாரிகள் மேலும் இருவரை கைது செய்தனர், அவர்கள் பீதியடைந்து ஓடத் தொடங்கினர். அவர்கள் சோதனை செய்தபோது, ஐந்து பாக்கெட் தங்க பேஸ்ட் மீட்கப்பட்டது. அவர்கள் சென்னைச் சேர்ந்த காஜா மொஹிதீன் (வயது 39) மற்றும் எஸ் பீர் மொஹிதீன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் AI-1984 மூலம் வந்த ஐந்து பயணிகள் தங்க பாக்கெட்டுகள் தங்களிடம் ஒப்படைத்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ALSO READ | வரலாறு காணாத விலையில் தகதகக்கும் தங்கம்! வெற்றி விழா காணும் வெள்ளி!!
ஒவ்வொரு நபருக்கும் ஒரு பாக்கெட்டை ஒப்படைத்ததையும் பயணிகள் உறுதிப்படுத்தினர். அவர்களிடம் இருந்து ரூ .66.73 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் ரூ .82.3 லட்சம் மதிப்புள்ள 1.48 கிலோ தங்கம் மீட்கப்பட்டு சுங்கச் சட்டம் 1962 ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.