தமிழகத்தில் காவல்துறையினரின் தபால் ஓட்டு 100 சதவீதம் பதிவு!!

தமிழகம் முழுவதும் போலீசுக்கு வழங்கப்பட்டிருந்த தபால் ஓட்டுக்கள் 100 சதவீதம் பதிவு சத்யப்பிரதா சாஹு கூறியுள்ளார்!!

Last Updated : Apr 26, 2019, 07:24 AM IST
தமிழகத்தில் காவல்துறையினரின் தபால் ஓட்டு 100 சதவீதம் பதிவு!! title=

தமிழகம் முழுவதும் போலீசுக்கு வழங்கப்பட்டிருந்த தபால் ஓட்டுக்கள் 100 சதவீதம் பதிவு சத்யப்பிரதா சாஹு கூறியுள்ளார்!!

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வாக்குகள் பதிவான வாக்கு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடைமுறைகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், முதல் நிலையில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்களும் இரண்டாவது நிலையில் துப்பாக்கி ஏந்திய மாநில காவல்துறையினரும், மூன்றாவது நிலையில் ஆயுதப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்று கூறினார்.

வாக்கு எண்ணும் மையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் பார்க்க விரும்பினால் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காவல்துறையினர் 100 சதவீத வாக்குப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். காவல் துறைக்கு 90 ஆயிரத்து 2 தபால் வாக்குகள் கொடுக்கப்பட்டதாகவும் அனைத்து வாக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத போதும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

 

Trending News