ஆங்கில புத்தாண்டையோட்டி சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்தி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளார்.
அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது; ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது முக்கிய இடங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை கருத்தில் கொண்டு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறது.
இதே போன்று 2018-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடங்களின் பொழுது சென்னையில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டு தளங்கள், மெரினா கடற்கரை, நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள் (Shopping Malls) போன்ற இடங்களில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 37 ஆம்புலன்ஸ்களும், நான்கு சக்கர (Four Wheel) ஆம்புலன்சும் மற்றும் 13 இரண்டு சக்கர ஆம்புலன்ஸ்களும், Hot Spot என்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தயார் நிலையில் நிறுத்தப்படவுள்ளது.
மேலும் சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் தகுந்த வசதிகளுடன் தயார் நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. அதே போன்று 108 சேவை மையம் (Call Center) கூடுதல் பளுவை எதிர்க்கொள்ள முடுக்கிவிடப்பட்டுள்ளது, மக்கள் நல்வாழ்வுத்துறை சென்னை மாநகர காவல் துறையுடன் இணைந்து செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படாத நிலையை உருவாக்க உறுதி பூண்டுள்ளது.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அரசு எப்பொழுதும் மக்களை பாதுகாப்பதில் முழு முனைப்புடன் தொடர்ந்து செயல்படும் என மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.