போதையில் வாகனம் ஓட்டினால் இனி 15 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என சென்னை மாநகர போலீஸ் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் தினந்தோறும் ஏராளமான சாலை விபத்துகள், உயிர் பலிகள் நடக்கின்றன.
விபத்து தடுப்பு நடவடிக்கையாக, போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது, வழக்கு பதிந்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது இருப்பினும் இதை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
முன்னதாக வாகன ஓட்டுனர்கள், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்தை சமீபத்தில்தான் தமிழக அரசு கட்டாயமாக்கி உள்ளது.
தற்போது அடுத்த நடவடிக்கையாக போதையில் வாகனம் ஓட்டுவோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 15 நாள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.