சென்னையில் கடும் புகை மூட்டம்: 15 விமானங்கள் தாமதம்!

சென்னையில் கடும் புகை மூட்டம் காரணமாக 15 மேற்பட்ட விமானங்கள் தாமதமாக தரையிறக்கபட்டது.

Updated: Jan 14, 2020, 09:21 AM IST
சென்னையில் கடும் புகை மூட்டம்: 15 விமானங்கள் தாமதம்!

சென்னையில் கடும் புகை மூட்டம் காரணமாக 15 மேற்பட்ட விமானங்கள் தாமதமாக தரையிறக்கபட்டது.

தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை உற்சாக கொண்டாப்படுகிறது. போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பார்கள்.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகையின் போதும் காற்று மாசு கடுமையாக அதிகரிக்கும். அந்த வகையில் இன்றும் கடுமையாக காற்று மாசு அதிகரித்துள்ளது.சென்னை முழுவதும் புகை மூட்டத்தால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். வாகனங்கள் செல்வது தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னையில் போகி பண்டிகை கொண்டாடப்படுவதை பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறக்கப்பட்டுள்ளது. டெல்லி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 15க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாக புறப்படுகின்றன.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.