கை விட்ட சொந்தங்கள், தேடி வந்த தொற்று: முதியோர் இல்லத்தில் கொரோனா!!

திருச்சியில் உள்ள திருவரும்பூர் பகுதியில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 2, 2020, 10:22 AM IST
  • கொரோனா தன் கொடூரக் களியாட்டத்தைத் தொடர்கிறது.
  • முதியோர் இல்லத்திலிருக்கும் 110 பேருக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தனர்.
  • 20 பேரின் பரிசோதனை முடிவுகள் சனிக்கிழமையன்று நேர்மறையாக வந்துள்ளது.
கை விட்ட சொந்தங்கள், தேடி வந்த தொற்று: முதியோர் இல்லத்தில் கொரோனா!! title=

திருச்சிராப்பள்ளி:  கொரோனா தன் கொடூரக் களியாட்டத்தைத் தொடர்கிறது. ஏழை பணக்காரர், இளைஞர் முதியவர் என பாகுபாடின்றி அது அனவரையும் தன் பிடியில் சிக்கவைத்து வருகிறது.

திருச்சியில் (Tiruchi) உள்ள திருவரும்பூர் பகுதியில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் இங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் கொரோனா தொற்றால் (CoronaVirus) பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில், காட்டூரில் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்த ஒருவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்படவே அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வெள்ளியன்று அவரது பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தன.  

இதையடுத்து அந்த முதியோர் இல்லத்திலிருக்கும் 110 பேருக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தனர். அவர்களில், 20 பேரின் பரிசோதனை முடிவுகள்  சனிக்கிழமையன்று நேர்மறையாக வந்துள்ளது.  எனவே சுகாதாரத் துறையின் அதிகாரிகள், 21 பேரையும் ஸ்ரீரங்கத்தில் உள்ள யாத்ரி நிவாஸில் உள்ள தற்காலிக கோவிட் மையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில், அந்த முதியோர் இல்லத்தில் உள்ள மற்றவர்களை முதியோர் இல்ல நிர்வாகிகள் அந்த வளாகத்திற்குள்ளேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.

ALSO READ: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.... ஒரே நாளில் 99 பேர் பலி...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த இல்லத்தைச் சேர்ந்த ஒரு முதியவர், “எங்களை நாடி வர வேண்டும் என நினைத்த சொந்தங்கள் விலகிச் சென்று விட்டன. வரக்கூடாது என நினைத்த இந்தத் தொற்று எங்களை நாடி வந்து விட்டது. இதுதான் விதியின் விளையாட்டோ?” என கேட்டு மனம் வருந்துவதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. 

Trending News