இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
Chennai: Tamil Nadu Governor Banwarilal Purohit unfurls the national flag on #RepublicDay2019 . Chief Minister Edappadi K Palaniswami and Deputy CM O Panneerselvam also present. pic.twitter.com/zcnZQqhyY1
— ANI (@ANI) January 26, 2019
தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் விருது, வேளாண்துறைக்கான சிறப்பு விருது ஆகியவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அண்ணா பதக்கங்கள்:-
நா.சூர்யகுமார், க.ரஞ்சித் குமார், ர.ஸ்ரீதர்.
காந்தியடிகள் காவலர் விருது:-
கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேதரத்தினம், கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் அ.பிரகாஷ், அரியலூர் மாவட்டம் விக்ரகிமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருக்குமார், நாமக்கல் - சேந்தமங்கலம் காவல்நிலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் கோபி.
வேளாண்துறைக்கான சிறப்பு விருது:-
புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு செட்டியாப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி.