தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் இறப்பு, பலி எண்ணிக்கை 61-ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று புதிதாக 716 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 510 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

Last Updated : May 12, 2020, 08:00 PM IST
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் இறப்பு, பலி எண்ணிக்கை 61-ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று புதிதாக 716 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 510 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று பதிவான 716 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 8718-ஆக அதிகரித்துள்ளது. இன்று பதிவான வழக்குகளிலும் பெரும்பாலான வழக்குகள் சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையது என சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.

சென்னையை பொருத்தவரையில் கொரோனா பதிவுகளின் எண்ணிக்கை 4882-ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து., திருவள்ளூரில் 467, கடலூரில் 396 வழக்குகளும் பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு 391, அரியலூர் 344, விழுப்புரம் 299 தொற்றுகளையும் பதிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு 83 பேர் இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 2134 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மற்றும் இன்று 8 இறப்புகள் என தமிழகத்தில் மொத்தம் 61 கொரோனா இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளது. 

தற்போது வரை 2,55,584 மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும், தற்போது வரை 8718 நபர்களின் மாதிரிகள் நேர்மறை முடிவு பெற்றுள்ளது எனவும், COVID-19 சோதனை 36 அரசு மற்றும் 16 தனியார் ஆய்வகங்களில் தமிழ்நாடு முழுவதும் செய்யப்படுகிறது எனவும் தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு வழங்கும் சுகாதார ஆலோசனைகள் மற்றும் பயண ஆலோசனைகளை கடைபிடிக்க பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும், கைக்குட்டை / துண்டைப் பயன்படுத்தி முகத்தை மூடி, இருமல் / தும்மல் போன்றவற்றைப் பயன்படுத்தி பொதுமக்கள் தேயிலை ஆசாரத்தைப் பின்பற்ற வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கை கழுவுதல் செய்யுங்கள் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More Stories

Trending News