தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு ஆய்வக ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் குறித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட ஆய்வக வல்லுநரின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தற்போது மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இப்போது வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு, வளாகத்தை சுத்திகரிப்பதற்காக சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "அவரது மாமியார் மற்றும் அவரது கணவர் ஏற்கனவே கொரோனா அறிகுறிகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் நோயாளிகளாக இருந்தனர். பின்னர் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் கொரோனா பிரிவிற்கு அவர்களை மாற்றினோம்.
இந்நிலையில் தற்போது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில்., நாங்கள் அவருடைய சக ஊழியர்கள் அனைவரையும் சோதித்து வருகிறோம், மற்றும் அவர்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று (வியாழக்கிழமை) அவர்களது முடிவுகளை பெறுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரின் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளனர். பரிசோதிக்கப்பட்ட தலைமை மருத்துவ அதிகாரியின் முடிவுகளும் எதிர்மறையாக திரும்பியுள்ள நிலையில், சக ஊழியர்களின் சோதனை முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஏப்ரல் 8-ஆம் தேதி நிலவரப்படி, 17 நேர்மறை கொரோனா வழக்குகள் தூத்துகுடியில் பதிவாகியுள்ளது. இதில் 13 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், நான்கு பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமை, மாநிலத்தில் COVID-19 வழக்குகளின் புதிய வழக்குகள் 48-ஆக பதிவானது, இதனையடுத்து மாநிலத்தில் மொத்தம் 738 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட சுகாதார புல்லட்டின் படி, 32,075 பயணிகள் மாநிலத்தில் 28 நாட்கள் பின்தொடர்தலை முடித்துள்ளனர். 92,814 பேர் 28 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலின் கீழும், 1,953 பேர் மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த 230 அறிகுறியற்ற பயணிகள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை, மாநிலம் 6095 மாதிரிகளை பரிசோதித்துள்ளது, அதில் 4,893 பேர் எதிர்மறையை முடிவுகள் பெற்றுள்ளனர், 344 மாதிரிகள் செயல்பாட்டில் உள்ளன.