உலகில் எந்த இனங்களுக்கும் சரி, நம்பிக்கை என்பது வெவ்வேறு விதமாக மாறுபடுகிறது. தமிழகத்தில் நாட்டார் மரபியலில் உள்ள ஒவ்வொரு தெய்வங்களுக்கும் பலவிதமான கதைகளும், நம்பிக்கைகளும் உண்டு. அவையோடு கலந்தபடியே அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | அன்னூரில் உள்ள ஒரு வீட்டுச்செடியில் மலர்ந்த அதிசயப் பூ.!
இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே இருகூர் கிராமத்தில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையான மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் மாசாணி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இந்தக் கோயிலுக்கு ஒரு வித்தாயசமான கதையுண்டு. அதாவது, ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனின் தலையில் கிளி வந்து அமரும் என்பது அம்மக்களின் நம்பிக்கையாகும். ‘சொல்லி வெச்சாப்போல, ஒவ்வொரு வருஷமும் எங்க அம்மனோட தலையில கிளி வந்து அமருங்க’ என்று பக்தர்கள் பூரிப்புடன் கூறுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்றுக் காரணமாக திருவிழா களைகட்டவில்லை. இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தணாடு மாசாணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இந்த வழிபாடு நடக்கும்போதுதான் அம்மனின் மடியில் அல்லது தலையில் வந்து கிளி அமர்வது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டும் அதேபோன்று கோவிலில் சுற்றி திரியும் கிளி ஒன்று சிறப்பு வழிபாடு நடக்கும்போது மாசாணி அம்மன் தலையில் அமர்ந்துகொண்டது. பாடல்கள் இசைத்த போதும் பூஜை செய்த போதும் நகராமல் அம்மன் தலையிலேயே கிளி இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்லாமல், பூக்களை எடுத்து அம்மன் தலையில் போட்டு அந்தக் கிளி பூஜையும் செய்தது.
இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் பக்திப் பரவசத்துடன் மாசாணி அம்மனை வழிபட்டனர். இந்த செய்தி அருகில் உள்ள ஊர்களுக்கும் பரவியதால், அம்மனை தரிசிக்க ஏராளமானோர் குவிந்தனர். இதுகுறித்துப் பேசிய பொதுமக்கள், ‘மாசாணி அம்மனுக்கு பூஜை செய்தபோதும், பெண்கள் குழுவாக பாடல் இசைத்த போதும், பம்பை மேளங்கள் முழங்கிய போதும் கிளி அம்மன் தலையில் இருந்து நகராமல் அப்படியே இருந்தது ஆச்சரியமாக இருப்பதாகவும், அம்மனே இந்தப் பாடல்களைக் கேட்டு ரசித்தது போல இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | திருவிழாவில் நீதிமன்றம்: ஆங்கிலேயர் காலத்திலிருந்து தொடரும் ஐதீகம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ